சுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை!

  churuddaiyaaka koonthal amaiyum. ithu koonthalin adarththiyaiyum, penkalin alakaiyum athikariththukkaaddum. aanaal churuddai mudiyai paraamarippu mikavum kadinam. churuddai mudiyai paraamarikka chila aaloachanaikalai itho.   • churuddai koonthal udainthu uthirvathai thadukka vaaram orumurai atharku thaneyaana chikichchai alippathu nallathu.oru kinnaththil venney eduththukkondu koonthalai nanraaka viriththu vidduk kollavum. vennaiyai viralil eduththu koonthalin vaerkal varai padumaaru thaeyththu nanku machaaj cheythu … Continue reading "churuddaiyaaka koonthalai paraamarikkum murai!"
churuddaiyaaka koonthalai paraamarikkum murai!

 

சுருட்டையாக கூந்தல் அமையும். இது கூந்தலின் அடர்த்தியையும், பெண்களின் அழகையும் அதிகரித்துக்காட்டும். ஆனால் சுருட்டை முடியை பராமரிப்பு மிகவும் கடினம். சுருட்டை முடியை பராமரிக்க சில ஆலோசனைகளை இதோ.
 
• சுருட்டை கூந்தல் உடைந்து உதிர்வதை தடுக்க வாரம் ஒருமுறை அதற்கு தனியான சிகிச்சை அளிப்பது நல்லது.ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்துக்கொண்டு கூந்தலை நன்றாக விரித்து விட்டுக் கொள்ளவும். வெண்ணையை விரலில் எடுத்து கூந்தலின் வேர்கள் வரை படுமாறு தேய்த்து நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைக்கவும். கூந்தலை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் உடைந்து உதிர்வது குறையும்.
 
• சுருட்டை முடி உள்ளவர்கள் சரியான ஷாம்பு, கண்டிசனரை பயன்படுத்துவது அவசியம். நார்மலான, நேரான கூந்தல் உள்ளவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டீசனரையே பயன்படுத்தக்கூடாது.
 
• தினசரி தலைக்கு குளித்தால் இயற்கையிலே கூந்தலில் உள்ள எண்ணெய் தன்மையை இழந்து விடும். இதனால் தலைமுடி வறண்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக சுருட்டை முடிக்கு அதிக எண்ணெய் தன்மை தேவை. அதிலும் தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் கூந்தல் சிக்கல் ஏற்படுவது அதிகமாகும்.
 
• சுருட்டை கூந்தல் உடையவர்கள் பெரிய பற்களை உடைய சீப்பில்தான் சீவவேண்டும். அப்பொழுதுதான் எளிதாக சிக்கல் எடுக்க முடியும்.
 
• தலைக்கு குளித்து விட்டு அதிகநேரம் தலையில் டவல் கட்டியிருக்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் ஈரப்பதம் உறிஞ்சப்படுவதோடு கூந்தல் அதிகம் வறண்டு உதிர வாய்ப்புள்ளது.

Popular Post

Tips