போதையில் 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவனுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை

  amerikkaavil 6maatha kulanthaiyai karpaliththavarukku visha oochi poaddu marana thandanai neraivaerrappaddathu. amerikkaavil ulla oakiyoa pakuthiyil lookkaasvillae enra pakuthi ullathu. intha oorai chaernthavar sdeev smith (vayathu 46).    ivar 1998m aandu thanathu tholi oruvarin 6 maatha kulanthaiyai karpaliththu kolai cheythathaiththodarnthu avar kaithu cheyyappaddaar. valakku vichaaranaiyil kurram neroopikkappaddathaal, avarukku marana thandanai vithikkappaddathu.    vichaaranaiyinpoathu sdeev smith kudipoathaiyil … Continue reading "poathaiyil 6 maatha kulanthaiyai karpaliththu konravanukku visha oochi moolam marana thandanai"
poathaiyil 6 maatha kulanthaiyai karpaliththu konravanukku visha oochi moolam marana thandanai

 

அமெரிக்காவில் 6மாத குழந்தையை கற்பழித்தவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஓகியோ பகுதியில் லூக்காஸ்வில்லே என்ற பகுதி உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித் (வயது 46). 
 
இவர் 1998ம் ஆண்டு தனது தோழி ஒருவரின் 6 மாத குழந்தையை கற்பழித்து கொலை செய்ததைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 
 
விசாரணையின்போது ஸ்டீவ் ஸ்மித் குடிபோதையில் இவ்வாறு செய்துவிட்டதாகவும், வேண்டுமென்றே நான் கொலை செய்யவில்லை என்றும், எனவே எனக்கு மரண தண்டனை விதிக்ககூடாது என்று வாதாடினார். ஆனால் அதை கோர்ட்டு ஏற்கவில்லை. இதையடுத்து அவருக்கு விஷஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 
 
ஸ்டீவ் ஸ்மிதித்துக்கு 21 வயதில் மகள் இருக்கிறார். தந்தையை மரண தண்டனை அறைக்கு அழைத்து சென்றதைக் கண்டு அவரது மகள் கதறி அழுதார்.
 

Popular Post

Tips