ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?

  Ø      chaathikka vaendum enra chapatham irukkirathu   Ø      vaalnthu kaadda vaendum enra vairaakkiyam irukkirathu   Ø      venru kaadda vaendum enra veempu irukkirathu   Ø      adaivatharku enru oru ladchiyam irukkirathu   Ø      antha ladchiyaththil oru theeviram irukkirathu   Ø      vaayppu enkae enkae enru … Continue reading "jaeyiththavarkalidam appadi ennathaanirukkirathu?"
jaeyiththavarkalidam appadi ennathaanirukkirathu?

 

Ø      சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது
 
Ø      வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது
 
Ø      வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது
 
Ø      அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது
 
Ø      அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது
 
Ø      வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது
 
Ø      வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
 
Ø      உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
 
Ø      தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
 
Ø      அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது
 
Ø      தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது
 
Ø      தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது
 
Ø      சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது
 
Ø      விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது
 
Ø      அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது
 
Ø      குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது
 
Ø      கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது
 
Ø      நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது
 
Ø      அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது
 
Ø      இப்போது சொல்லுகள், உங்களிடம் என்ன இருக்கிறது?

Popular Post

Tips