யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகி நால்வர் படுகாயம்

  yaalppaanam, kolumpuththurai kandi chanthiyil idamperra vaalvedduch champavaththil naalvar padukaayamadainthullathaaka therivikkappadukirathu.   naerru 5.30 maneyalavil ichchampavam idamperrullathu. ichchampavam thodarpaaka maelum theriyavaruvathaavathu,   koduththa panaththinai kaeddu chenra iruvar meethu vaakanaththil vantha 8 paer konda kuluvinar kaikalappil eedupaddathudan, vaalaal veddiyullanar. iru chaaraarukkumidaiyae idamperra iththaakkuthal champavaththil naalvar padukaayamadainthullanar.   aariyakulam pakuthiyaich chaerntha kunachaekaram piraemamkaan (vayathu 26), chatharchan neroopan … Continue reading "yaalil vaalveddukku ilakkaaki naalvar padukaayam"
yaalil vaalveddukku ilakkaaki naalvar padukaayam

 

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை கண்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
நேற்று 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 
கொடுத்த பணத்தினை கேட்டு சென்ற இருவர் மீது வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட குழுவினர் கைகலப்பில் ஈடுபட்டதுடன், வாளால் வெட்டியுள்ளனர். இரு சாராருக்குமிடையே இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
 
ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேகரம் பிரேமம்காந் (வயது 26), சதர்சன் நிரூபன் (வயது 27), குணசேகரம் பிரசாத் (வயது 24), வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த காந்தன் ஆகிய நால்வரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
 
வெட்டுக் காயங்களுக்கு இலக்காகிய நால்வரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலத்த காயங்களுடன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
     

Popular Post

Tips