பெண் தீவிரவாதி தலைக்கு ரூ. 5.5 கோடி- வெகுமதி அறிவித்துள்ளது அமெரிக்கா

  poaleechai kolai cheytha valakkil, pen payankaravaathiyai, amerikka poaleechaar thaedi varukinranar. intha pennai parri thakaval tharuvooukku, 5.5 koadi roopaay vekumathi arivikkappaddullathu.    amerikkaavin, "karuppina viduthalai padai'yaich chaernthavar, jone jaechimaard . palvaeru kurrankalil eedupaddu vantha, jaechimaard, 73m aandu, neyoo jaerchiyil, iruchakkara vaakanaththil, than kooddaaliyudan chenra poathu, poaleechaar avarai mariththanar.   appoathu jaechiyum, avarathu kooddaaliyum, poaleechaar meethu … Continue reading "pen theeviravaathi thalaikku roo. 5.5 koadi- vekumathi ariviththullathu amerikkaa"
pen theeviravaathi thalaikku roo. 5.5 koadi- vekumathi ariviththullathu amerikkaa

 

போலீசை கொலை செய்த வழக்கில், பெண் பயங்கரவாதியை, அமெரிக்க போலீசார் தேடி வருகின்றனர். இந்த பெண்ணை பற்றி தகவல் தருவோருக்கு, 5.5 கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின், "கருப்பின விடுதலை படை'யைச் சேர்ந்தவர், ஜோனி ஜெசிமார்ட் . பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த, ஜெசிமார்ட், 73ம் ஆண்டு, நியூ ஜெர்சியில், இருசக்கர வாகனத்தில், தன் கூட்டாளியுடன் சென்ற போது, போலீசார் அவரை மறித்தனர்.
 
அப்போது ஜெசியும், அவரது கூட்டாளியும், போலீசார் மீது சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர். சில நாட்களுக்குப் பின், ஜெசியை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜெசி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 79ம் ஆண்டு, நியூஜெர்சியின், கிளின்டன் சிறையிலிருந்து, ஜெசி தப்பி சென்றார். 
 
அதுமுதல் கொண்டு, அவர், தலைமறைவாக உள்ளார். 84ம் ஆண்டு, ஜெசி, கியூபாவில் உள்ளது, தெரிய வந்தது. அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள், அவரை கைது செய்ய, பல்வேறு திட்டங்களை தீட்டியும், இன்னும் பலனளிக்கவில்லை. அவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு, 5.5 கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Post

Tips