பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்

  1.kilicharinum, thaenum kalanthu rinkils irukkum idaththil thadavi, kojcha naeram machaaj cheythu, iravu pooraavum viddu kaalaiyil alampavum. mukam ilamaiyum, vacheekaramum aakamaarum.   2.oru spoon thaenel, kaal spoon karad chaaru kalakkavum. athai kaluththai churriyum mukaththilum poaddu 15-20 nemidam appadiyae kaayavidavum. kojcham venneeril oruthuli choadaa uppai poaddu anthath thanneeril pajchai nanaiththu mukaththai nanraakath thudaikkavum. vaaraththil irandu, moonru … Continue reading "penkalukkaana alakukkurippukal"
penkalukkaana alakukkurippukal

 

1.கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ் செய்து, இரவு பூராவும் விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.
 
2.ஒரு ஸ்பூன் தேனில், கால் ஸ்பூன் கரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றியும் முகத்திலும் போட்டு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
3.சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.
 
4.பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.
 
5.ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

Popular Post

Tips