பட்டு போன்ற மேனி வேண்டுமா? — அழகு குறிப்புகள்

  oru naalaikku, onrarai liddar muthal irandu liddar thanneer arunthupavarkalukku, vayirrup pirachnai varaathu. vayiru nalamaaka irunthaal, nam udampin charumamum chuththamaaka irukkum.   kulippatharku mun, oru vaalith thanneeril, oru moodi elumichchaiyaip pilinthu kollunkal. choappu thaeyththuk kuliththa pin, kadaichiyaaka, "laman paath' edunkal. ithu, puththunarvaiyum, charuma minu minuppaiyum tharum.   naaddu marunthuk kadaikalil, kaarpoaka arichi enru kaeddaal tharuvar. … Continue reading "paddu poanra maene vaendumaa? — alaku kurippukal"
paddu poanra maene vaendumaa? — alaku kurippukal

 

ஒரு நாளைக்கு, ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு, வயிற்றுப் பிரச்னை வராது. வயிறு நலமாக இருந்தால், நம் உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
 
குளிப்பதற்கு முன், ஒரு வாளித் தண்ணீரில், ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக, "லெமன் பாத்' எடுங்கள். இது, புத்துணர்வையும், சரும மினு மினுப்பையும் தரும்.
 
நாட்டு மருந்துக் கடைகளில், கார்போக அரிசி என்று கேட்டால் தருவர். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு, பேஸ்ட் மாதிரி செய்து, தோலின் மீது பூசவும். விரைவில், தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!
 
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்சியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி, எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்கலாம்.

Popular Post

Tips