ஆரஞ்சு பழ அழகு டிப்ஸ்…..

  * aarajchu jusai ahhpareesaril vaiththu ais kaddiyaakki athai vellaith thuneyil kaddi, kannukku mael 5 nemidam oththi edunkal. oru naal viddu oru naal ippadi cheythu vanthaal kankal thookkaminmaiyaal aerpadum choarvai poakki ''plich'' chena pirakaachamaaka maarri vidum.    • ularntha aarajchu thol, thundukalaakkiya veddivaer, champanki vithai, poolaan kilanku, kadalai paruppu, payantham paruppu, kachakachaa ivai ovvoonrum 100 … Continue reading "aarajchu pala alaku dips….."
aarajchu pala alaku dips…..

 

* ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கி அதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்கு மேல் 5 நிமிடம் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் கண்கள் தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வை போக்கி ''ப்ளிச்'' சென பிரகாசமாக மாற்றி விடும். 
 
• உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம். 
 
* ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் 2 சிட்டிகை இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது. 
 
* சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்ட ஒரு வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும். 
 
* ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்

Popular Post

Tips