செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப மூன்று வரி ஹைகூ: கேட்கிறது நாசா

  chennera kirakamaana ‘chevvaay' parriya aayvu ippoathu theeviramadainthullathu. intha aandu iruthiyil chevvaay kirakaththukkuch chellum vinveli oadaththil kavithaikal,marrum eluthiya unkalin peyar adankiya di.vi.diyaiyum chaerththu anuppa naachaa vijjanekal mudivu cheythullanar.    itharkaaka moonru vari hakoo kavithaikalai kaedkirathu naachaa. amerikka vinveli aayvu neruvanamaana naachaa, chevvaay kirakaththin churruppurach choolalai aaraayakkoodiya vinveli oadaththai varum navamparil anuppavullathu.    vinveli aaraaychchi thodarpaaka … Continue reading "chevvaay kirakaththirku anuppa moonru vari hakoo: kaedkirathu naachaa"
chevvaay kirakaththirku anuppa moonru vari hakoo: kaedkirathu naachaa

 

செந்நிற கிரகமான ‘செவ்வாய்' பற்றிய ஆய்வு இப்போது தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி ஓடத்தில் கவிதைகள்,மற்றும் எழுதிய உங்களின் பெயர் அடங்கிய டி.வி.டியையும் சேர்த்து அனுப்ப நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். 
 
இதற்காக மூன்று வரி ஹைகூ கவிதைகளை கேட்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்புறச் சூழலை ஆராயக்கூடிய விண்வெளி ஓடத்தை வரும் நவம்பரில் அனுப்பவுள்ளது. 
 
விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக. இந்த ஓடத்தில் ஆராய்ச்சிக்கான கருவிகளோடு, சில தகவல்கள் அடங்கிய டி.வி.டி. ஒன்றையும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, 3 வரிகள் அடங்கிய ஹைக்கூ கவிதைகளை ஆர்வமுள்ளவர்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
"செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பும் நடவடிக்கைகளிலும், செவ்வாய் கிரக ஆராய்ச்சியிலும் பொதுமக்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இது போன்று டி.வி.டி.யில் கவிதை அனுப்பும் பணியை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. 
 
நாசாவுக்கு வரும் கவிதைகளை ஆன்-லைன் முறையில் பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி, ஆகச் சிறந்த 3 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அதை டி.வி.டியில் பதிவு செய்யப்படும். மூன்று வரி கவிதைகளை அனுப்ப வரும் ஜூலை 1 கடைசி தேதியாகும்.

Popular Post

Tips