காதலின் முதல் பரீட்சை எழுதப் போறிங்களா? உங்களுக்காக சில ரிப்ஸ்..

  neenkal virumpum pennudan muthan muthalil paechappoakireer kal. enna paechuvathu? eppadi aarampippathu? enru kulappamaakaththaan irukkum. muthal chanthippu!   1.muthal chanthippu oru paridchai maathiri! munnechcharikkaiyaaka enna paechappoakirom enru thelivaaka thayaaraaka irukka vaen dum. itharku kojcham hoam voork cheythu thayaaraaka vaendi yathu avachiyam! chaathaaranamaana kaelvi kalukku chaathaaranamaana pathilkal avvalavu chuvaiyaaka irukkaathu. chuvaiyaana, thaneth thanmaiyaana pathilkalaith thayaarcheythu kollunkal. … Continue reading "Kadhalin muthal pareedchai eluthap poarinkalaa? unkalukkaaka chila rips.."
Kadhalin muthal pareedchai eluthap poarinkalaa? unkalukkaaka chila rips..

 

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர் கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு!
 
1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி!
முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண் டும். இதற்கு கொஞ்சம் ஹோம் வொர்க் செய்து தயாராக வேண்டி யது அவசியம்! சாதாரணமான கேள்வி களுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித் தன்மையான பதில்களைத் தயார்செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!
 
2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீ ங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண் ணுக்குத்தான் பிடிக்காது!!
 
3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.
 
4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக்கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.
 
5. அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.
 
6. அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாக த் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும் போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!
 
7. தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசு ம் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.
 
8. கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்று முற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.
 
9. கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.அன்றைய சுவரசியமான செய்தி பற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.
 
10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயார்செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்று விட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!
 
11. அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லா ப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்க ளை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!
 
12. அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை, கைப் பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந் து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப்பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!!
 
13.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லை யென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க் கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..
 
14. அவளின் குடும்பத்தில் உள்ள நபர் களைப் பற்றி, அண்ணன்கள், தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.
 
15. இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக் கொண்டுபேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!
 
 

Popular Post

Tips