பிலிப்பைன்ஸின் பாரம்பரிய பவளப்பாறைகளை கிழித்த சீன மீனவர்கள் : 12.5 கோடி அபராதம்

  pilippainchin pukalperra paarampariya chinnamaaka arivikkappadda pavalappaaraikalai chaethappaduththiya cheena naaddu meenavarkalukku 12.5 koadi aparaatham vithikkappaddullathu.    pilippainchil yuneskoa amaippaal paarampariya chinnamaaka ankeekarikkappadda noorraandukal palamaiyaana ulakap pukalperra pavalappaaraikal irukkinrana. intha ne்laiyil, munarivippinri thideerena ippakuthiyil ulla pavalap paaraikalaik kiliththukkondu cheena meenpidippadaku onru nulainthathu.    3,902 chathura kiloa meeddar pavalappaarai pakuthikalai kiliththu chenru chaethappaduththiya antha meenpidippadaku, pinnar thaduththu … Continue reading "pilippainchin paarampariya pavalappaaraikalai kiliththa cheena meenavarkal : 12.5 koadi aparaatham"
pilippainchin paarampariya pavalappaaraikalai kiliththa cheena meenavarkal : 12.5 koadi aparaatham

 

பிலிப்பைன்சின் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பவளப்பாறைகளை சேதப்படுத்திய சீன நாட்டு மீனவர்களுக்கு 12.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
பிலிப்பைன்சில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகள் இருக்கின்றன. இந்த நி்லையில், முன்அறிவிப்பின்றி திடீரென இப்பகுதியில் உள்ள பவளப் பாறைகளைக் கிழித்துக்கொண்டு சீன மீன்பிடிப்படகு ஒன்று நுழைந்தது.
 
 3,902 சதுர கிலோ மீட்டர் பவளப்பாறை பகுதிகளை கிழித்து சென்று சேதப்படுத்திய அந்த மீன்பிடிப்படகு, பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த படகில் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாக்கப்பட்டு வந்த பேங்கோலின்ஸ் என்ற ஒரு அரிய வகை விலங்குகளூம் நூற்றுக்கணக்கில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. 
 
ஆனால், எதிர்பாராத விதமாக அவைகளும் இறந்துவிட்டன. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தேசிய பூங்கா நிறுவனம் மிகப்பெரும் கவலை அடைந்துள்ளது. இதையடுத்து அந்த சீன மீன்பிடிப்படகில் இருந்த 12 மீனவர்களுக்கும், 12.5 கோடி அபராதமும், பல வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று பிலிப்பைன்ஸ் கடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Popular Post

Tips