சிலர் ஏன் ஃபேஸ்புக்கில் இருந்து தள்ளியே இருக்கிறார்கள் தெரியுமா?

  ulakam muluvathum koadik kanakkaana paer ahhpaespuk payanpaduththukinranar. innelaiyil chilar ahhpaespukkai payanpaduththuvathillaiyaam. kaarnal palkalaikkalaka aayvaalarkal ahhpaespuk payanpaadu kuriththu oru kanakkeduppu nadaththinar.    aanlainel nadaththappadda intha kanakkeduppil 410 paer pankaerru palvaeru kaelvikalukku pathil aliththullanar. athil 46 paer thankal ahhpaespuk kanakkai dileed cheythuviddathaaka theriviththullaarkal. ahhpaespukkil irunthu veliyaeriyatharkaaka chanthoshappaduvathaaka 90 chathaveetham paer theriviththullanar. palar ahhpaespukkil irunthu vilakiyae irukkinranar. … Continue reading "chilar aen ahhpaespukkil irunthu thalliyae irukkiraarkal theriyumaa?"
chilar aen ahhpaespukkil irunthu thalliyae irukkiraarkal theriyumaa?

 

உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சிலர் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதில்லையாம். கார்னல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஃபேஸ்புக் பயன்பாடு குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தினர். 
 
ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 410 பேர் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அதில் 46 பேர் தங்கள் ஃபேஸ்புக் கணக்கை டிலீட் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியதற்காக சந்தோஷப்படுவதாக 90 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பலர் ஃபேஸ்புக்கில் இருந்து விலகியே இருக்கின்றனர். சிலரால் ஃபேஸ்புக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. 
 
அதனால் அவர்கள் சில காலம் மட்டும் ஃபேஸ்புக்கை விட்டு விலகி இருக்கின்றனர். ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 110 பேர் தங்கள் ஃபேஸ்புக் கணக்கை டீஆக்டிவேட் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு செய்தவர்களில் 3ல் 1 சதவீதம் பேர் தங்கள் முடிவு குறித்து மகிழ்ச்சியாக இல்லை. அதில் சிலர் மீண்டும் ஃபேஸ்புக்கை மீண்டும் பயன்படுத்த துவங்கிவிட்டனர். சிலர் ஃபேஸ்புக்கில் இருந்து வரும் இமெயில்களை தாங்கள் பயன்படுத்தாத இமெயில் முகவரிக்கு திருப்பிவிட்டுள்ளனர். 
 
சிலர் ஃபேஸ்புக்கை பிளாக் செய்து வைத்துள்ளனர். தகவல் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது, சொந்த விஷயம், அடிமையாகிவிடுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர். ஃபேஸ்புக்கில் உயர் அதிகாரியுடன் தோழமை, முன்னாள் காதலி அல்லது காதலர் இருப்பது போன்ற காரணங்களாலும் சிலர் அதை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்றதில் 75 பேர் இதுவரை ஃபேஸ்புக்கே பயன்படுத்தியதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Popular Post

Tips