விவாகரத்து பேப்பரில் உருவான புதிய திருமண ஆடை

  palaiya vivaakaraththu paepparkalaal oru puthumaiyaana thirumana aadaiyai uruvaakkiyullaar inkilaanthu maanavi daemi.    inkilaanthu naaddil choorri nakaril vachikkum palli maanavi daemi paarnees (vayathu 15) puthumaiyaana thirumana aadaiyai uruvaakkinaar. i   thu chamooka valaithalaththil (paespuk) veliyaaki perum varavaerpai perrathu. athil innoru vichaesha thakaval ennavenraal palaiya vivaakaraththu kaakitham kondu ithu vadivamaikkappaddullathu.   intha thirumana aadaiyai orae vaaraththil … Continue reading "vivaakaraththu paepparil uruvaana puthiya thirumana aadai"
vivaakaraththu paepparil uruvaana puthiya thirumana aadai

 

பழைய விவாகரத்து பேப்பர்களால் ஒரு புதுமையான திருமண ஆடையை உருவாக்கியுள்ளார் இங்கிலாந்து மாணவி டெமி. 
 
இங்கிலாந்து நாட்டில் சூர்ரி நகரில் வசிக்கும் பள்ளி மாணவி டெமி பார்னீஸ் (வயது 15) புதுமையான திருமண ஆடையை உருவாக்கினார். இ
 
து சமூக வளைதளத்தில் (பேஸ்புக்) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் இன்னொரு விசேஷ தகவல் என்னவென்றால் பழைய விவாகரத்து காகிதம் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த திருமண ஆடையை ஒரே வாரத்தில் 40 ஆயிரம் பேர் கண்டு வியப்பு தெரிவித்ததுடன், ஏராளமான பேர் இதுபோன்ற திருமண ஆடை தங்களுக்கு செய்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள் என மாணவி டெமி தெரிவிக்கிறார்.
 
1500 விவாகரத்து பேப்பர்களால் உருவாக்கப்பட்டதாம் இந்த திருமண ஆடை.
 
டெமி ஒரு சர்வே எடுத்தாராம் திருமணத்தைப் பற்றி, அதில் வெகு விரைவில் திருமணத்தை செய்து கொள்பவர்கள், வெகு விரைவாக டைவர்ஸ் செய்து கொள்கிறார்கள் என முடிவுகள் தெரிய வந்ததாம். இதுவே, இந்த ஆடையை உருவாக்க தூண்டுகோலாக இருந்ததாம்.
 
முக்கிய ஆடை வடிவமைப்பாளர்கள் இவரின் இந்த காகித ஆடையின் உரிமையை வாங்குவதில் போட்டியிடுகிறார்களாம்.
 
முதலில் வெறும் நியூஸ் பேப்பரில் இந்த ஆடையை உருவாக்க தான் டெமி திட்டமிட்டாராம். பின் கருத்து சொல்ல விரும்பி விவாகாரத்து பேப்பரை தேர்வு செய்தாராம்.
 
பயனுள்ள சமூக வேலைகளில் டெமி ஏடுபட்டுள்ளது எங்கள் பள்ளிக்கே பெருமையாக உள்ளது என அவரின் பள்ளி ஹெட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

Popular Post

Tips