பாதவெடிப்புக்குஅதிரடி நிவாரணம் தேன்

  paathavedippu athika valiyai kodukkum. choopparaana uruvaththaiyum chumaaraaka kaanpikkum. athodu aarokkiyamarrathum kooda. enna cheythaalum thirumpa varukirathae ena kavalaiyaaka irukkirathaa? neenkal kaelvippadaatha intha kurippukalai payanpaduththip paarunkalaen. itho unkalukkaana eliya kurippukal inkae kodukkappaddullathu.. thaen kreem cheyya thaevaiyaanavai: thaen – 1 kap paal – 1 spoon aarajchu chaaru – 2 spoon paatha vedippukalukkaana thaen kreem thaenai laechaaka choodupaduththunkal. … Continue reading "paathavedippukkuathiradi nevaaranam thaen"
paathavedippukkuathiradi nevaaranam thaen

 

பாதவெடிப்பு அதிக வலியை கொடுக்கும். சூப்பரான உருவத்தையும் சுமாராக காண்பிக்கும். அதோடு ஆரோக்கியமற்றதும் கூட. என்ன செய்தாலும் திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா? நீங்கள் கேள்விப்படாத இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்களேன். இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது..

தேன் க்ரீம் செய்ய தேவையானவை:

தேன் – 1 கப்

பால் – 1 ஸ்பூன்

ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன்

பாத வெடிப்புகளுக்கான தேன் க்ரீம் தேனை லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஆரஞ்சு சாறை கலக்கவும். பாதம் மிகவும் கடினமாக இருந்தால் ஆரஞ்சு சாறை அதிகப்படுத்திக் கொள்ளவும். பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் பூசிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும்.

வேப்பிலையை அரைத்து அதனுடன் பயித்தப் பருப்பு பொடி, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து தினமும் பாதங்களில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்தால் சுருக்கங்களின்றி, வெடிப்பு மறைந்து பாதம் பளபளக்கும்.

கால் பக்கெட் வெதுவெதுப்பான நீரில் 2 கப் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து அதில் கால்களை அமிழுத்துங்கள். இதிலுள்ள  அமிலத்தன்மை பாதத்திலுள்ள கடினத்தன்மையை அகற்றி மென்மையாக்கிவிடும். வெடிப்பும் வேகமாக மறைந்து விடும்.

 

Popular Post

Tips