நகம் கடிப்பது மனநோயா??

palarukkum nakam kadikkum palakkam irukkirathu. ithanai chaathaaranamaana onraakathaan nenaikkirom aanaal athu oru valaiyaana mana nooy en koorappadukirathu. nakam kadikkum palakkum kulanthaip paruvaththil thodanki vidukirathu. pinnar paruva vayathil ippalakkam thaanaay marainthu poakum. kurippidda chilaraal ippalakkaththilirunthu vidupada mudivathillai. kaaranamillaatha achcham, thavaraana ennankal manathil eluvathaal ivvaaru nakam kadikkum palakkam oruvarukkuthodaralaam. nakam kadiththal mana aluththaththin velippaadu enrum koorappadukirathu. nakam … Continue reading "nakam kadippathu mananooyaa??"
nakam kadippathu mananooyaa??

பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிரோம் ஆனால் அது ஒரு வலையான மன நோய் என் கூறப்படுகிறது.

நகம் கடிக்கும் பழக்கும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும்.
குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்குதொடரலாம்.
நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது.
மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் நகம் கடித்தல் கெடுதல் விளைவிக்கும். விரல் நுனிகளில் அழுக்குகள் இருக்கும். நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். எனவே, நகம் கடிக்கும் பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுபடுவது நன்மை தரும்.

 

Popular Post

Tips