இந்த தீபாவளி செம்ம வசூல்மா-மெர்சல் டீசர் விமர்சனம்

rachikarkal nakam kadikka chariyaaka maalai 6 manekku cholli adiththa killiyaaka merchal deechar velivanthathu. deechar velivantha chila nemidaththilaeyae pala chaathanaikalai oarankaddiyathu. deechar aarampaththilaeyae ‘nee parra vaiththa neruppoanru, parri eriya unnai kaedkum…nee vithaiththa vinaiyellaam, unnai arukka kaaththirukkum.’ enra vachanaththudan thalapathi vaaychil thodankukinrathu. athilum athai paechuvathu maejik cheyyum vijay thaan enru thelivaaka therikinrathu, maelum, than thanthaiyai konravanai palivaankum … Continue reading "intha theepaavali chemma vachoolmaa-merchal deechar vimarchanam"
intha theepaavali chemma vachoolmaa-merchal deechar vimarchanam

ரசிகர்கள் நகம் கடிக்க சரியாக மாலை 6 மணிக்கு சொல்லி அடித்த கில்லியாக மெர்சல் டீசர் வெளிவந்தது. டீசர் வெளிவந்த சில நிமிடத்திலேயே பல சாதனைகளை ஓரங்கட்டியது.

டீசர் ஆரம்பத்திலேயே ‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று, பற்றி எரிய உன்னை கேட்கும்…நீ விதைத்த வினையெல்லாம், உன்னை அறுக்க காத்திருக்கும்.’ என்ற வசனத்துடன் தளபதி வாய்ஸில் தொடங்குகின்றது.

அதிலும் அதை பேசுவது மேஜிக் செய்யும் விஜய் தான் என்று தெளிவாக தெரிகின்றது, மேலும், தன் தந்தையை கொன்றவனை பழிவாங்கும் வேகத்துடன் அவர் பேசுவது போலவும் தெரிகின்றது.

அதை தொடர்ந்து அப்பா விஜய்யை கிராமத்தில் காட்ட, அது தமிழகம் போல் எங்குமே தெரியவில்லை, ஏதோ பஞ்சாப் போல் உள்ளது, ஒருவேளை செட் அப்படி அமைத்தார்களா, இல்லை உண்மையாகவே வெளிமாநிலத்தில் தான் இவர்கள் இப்படி வாழ்கின்றார்களா? என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் அங்கு அப்பா விஜய் குஸ்தி சண்டை போடுவராக வருவது போல் தெரிகின்றது, படத்தில் மருத்தவராக வரும் விஜய் குறித்து எங்குமே தெரியவில்லை.

ஒருவேளை பல வெள்ளைக்காரர்கள் முன்னால் வேஷ்டி சட்டையில் வருவது தான் அவரா? என யோசிக்க வைக்கின்றது, அதைவிட புறாவை காட்டி Peace Bro என்று சொல்வது விஜய் சமீபத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாதீர்கள் என்று சொன்னது நினைவிற்கு வருகின்றது.

கதை இது தான் என்று எளிதில் யூகித்தாலும் அட்லீ அதை தாண்டி நம்மை கண்டிப்பாக சர்ப்ரைஸ் செய்வார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, இந்த தீபாவளி தளபதிக்கு செம்ம வசூல்மா.

Popular Post

Tips