நவராத்திரி கொலு படியில் என்னென்ன வைக்கலாம்?

manethan padippadiyaaka than aanmika chinthanaikalai valarththu, iruthiyaaka iraivanudan kalakka vaendum enra thaththuvaththai unarththuvatharkaakavae, koluvil padikal amaikkappaddu, athil poammaikal adukki vaikkappadukinrana. onpathu padikal amaippathu marapu. ovvooru padiyilum aitheekappadi poammaikalai vaikka vaendum. muthalaam padi: oararivu uyirkalaana pul, chedi, kodi poanra thaavara varkankalin poammaikal. irandaam padi: eerarivu konda naththai, chanku poanra poammaikal. moonraam padi: moonrarivu uyirkalaana karaiyaan, erumpu poanravarrin poammaikal. naalaam … Continue reading "navaraaththiri kolu padiyil ennenna vaikkalaam?"
navaraaththiri kolu padiyil ennenna vaikkalaam?

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள்.

இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

நாலாம் படி: நான்கறிவு உயிர்களாக விளங்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

ஐந்தாம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்

ஆறாம் படி: ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

ஏழாம் படி: மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம் படி: தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவகிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்கவேண்டும்.

 

 

Popular Post

Tips