தலையில் உள்ள  பொடுகுக்கு வேப்பிலை

vaeppilai marrum thaenkaay enney:2 daepil spoon thaenkaay enneyai choodaerri, athil 3 daepil spoon vaeppilai enneyai chaerththu kalanthu, vethuvethuppaana nelaikku vanthathum, antha enneyai thalaiyil skaalppil nanku padumpadi machaaj cheythu, 30 nemidam oora vaiththu, pin alacha, poadukuth thollai, arikkum uchchanthalai poanravai adankum. vaeppilai paesd:oru kaiyalavu vaeppilaiyai eduththuk kondu, neeril paeddu nanku kothikka vaiththu, pin antha vaeppilaikalai eduththu araiththu paesd cheythu, … Continue reading "thalaiyil ulla  poadukukku vaeppilai"
thalaiyil ulla  poadukukku vaeppilai

வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்:2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் 3 டேபிள் ஸ்பூன் வேப்பிலை எண்ணெயை சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச, பொடுகுத் தொல்லை, அரிக்கும் உச்சந்தலை போன்றவை அடங்கும்.

வேப்பிலை பேஸ்ட்:ஒரு கையளவு வேப்பிலையை எடுத்துக் கொண்டு, நீரில் பேட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த வேப்பிலைகளை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

முட்டை மற்றும் வேப்பிலை:முட்டையின் வெள்ளைக்கருவுடன் வேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, தலையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலை தண்ணீர்:ஒரு கையளவு வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு தலைக்கு குளிக்கும் போதெல்லாம் அலசி வந்தால், தலையில் பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

வேப்பிலை பொடி:வேப்பிலையில் வெயிலில் உலர்த்தி, பின் அதனை பொடி செய்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவைப்படும் போது, அதனை எடுத்து, நீர் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளிர்த்து வாருங்கள்.

 

Popular Post

Tips