கருவளையத்தை போக்கும் ஆமணக்கு எண்ணெய்

mana aluththam, thookkaminmai, haarmon maarrankal poanra pirachchinaikal kankalai churri karuvalaiyam thonruvatharku muthanmai kaaranamaaka irukkirathu. karuvalaiyaththai poakkum enneykalmana aluththam, thookkaminmai, haarmon maarrankal poanra pirachchinaikal kankalai churri karuvalaiyam thonruvatharku muthanmai kaaranamaaka irukkirathu. ithanaip poakka athika chelavu cheyyavo, menakkedavo vaendiyathillai. aamanakku enneyai payanpaduththiyae karuvalaiyankalai poakki vidalaam. ithu chirantha iyarkai maayschuraicharaaka cheyalpaddu thaeka nalanel panku kolkirathu. tholil padinthirukkum achuththankal, … Continue reading "karuvalaiyaththai poakkum aamanakku enney"
karuvalaiyaththai poakkum aamanakku enney

மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது.

கருவளையத்தை போக்கும் எண்ணெய்கள்மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது.

இதனைப் போக்க அதிக செலவு செய்யவோ, மெனக்கெடவோ வேண்டியதில்லை.

ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தியே கருவளையங்களை போக்கி விடலாம்.

இது சிறந்த இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்பட்டு தேக நலனில் பங்கு கொள்கிறது.

தோலில் படிந்திருக்கும் அசுத்தங்கள், அழுக்கை நீக்கி சருமம் தூய்மையாகவும், புதியதாகவும் ஜொலிக்க துணைபுரிகிறதுகருவளைய பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில துளிகள் ஆமணக்கு எண்ணெய்யை கண்களுக்கு அடியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

முக்கியமாக இரவு தூங்க செல்லும் முன்பு கண்களையொட்டி தேய்த்துவிட்டு, காலையில் முகத்தை கழுவுவது நல்ல பலனை கொடுக்கும். ஆமணக்கு எண்ணெயுடன் பால் கலந்தும் பயன்படுத்தலாம்.

இரண்டையும் சில துளிகள் கலந்துவிட்டு, கண்களின் அடிப்பரப்பில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும்.

தொடர்ந்து தேய்த்து வந்தால் விரைவில் கருவளைய பிரச்சினை தீர்ந்துவிடும்ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்தும் தேய்த்து வரலாம்.

இரண்டு எண்ணெய்களையும் கண்களுக்கு அடிப்பரப்பில் தடவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். காலையில் கழுவுங்கள். இதேபோல் பாதாம் எண்ணெயுடன், ஆமணக்கு எண்ணெயை சேர்த்தும் பயன்படுத்தலாம்.

 

 

 

Popular Post

Tips