கருணை கொலை

kadantha 37 aandukalaaka koamaa nelaiyil irukkum mumpai nars arunaavai karunai kolai cheyya anumathi koari thodarappadda manuvai uchchaneethimanram inru thallupadi cheythu theerppaliththathu. mumpai kae.i.em.maruththuvamanaiyil narchaaka paneyaarri vanthavar arunaa shaanpaak. 1973m aandu navampar 27m thaethi athae maruththuvamanaiyil paneyaarriya thuppuravu tholilaali oruvaraal kodooramaaka palaathkaaram cheyyappaddaar. arunaavin kaluththai antha thuppuravu tholilaali irumpu chankiliyaal irukkiyathil moolaikku aakchijan chelvathu paathikkappaddathu. ithaiyaduththu … Continue reading "karunai kolai"
karunai kolai
கடந்த 37 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் மும்பை நர்ஸ் அருணாவை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. மும்பை கே.இ.எம்.மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் அருணா ஷான்பாக். 1973ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளி ஒருவரால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். அருணாவின் கழுத்தை அந்த துப்புரவு தொழிலாளி இரும்பு சங்கிலியால் இறுக்கியதில் மூளைக்கு ஆக்சிஜன் செல்வது பாதிக்கப்பட்டது. இதையடுத்து அருணா கோமா நிலைக்கு சென்றார். கடந்த 37 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் அவரை கே.இ.எம். மருத்துவமனை நர்ஸ்கள் குழந்தைபோல் கவனித்து வருகிறார்கள்.

 

அருணாவின் நிலையைக் கண்டு வருந்திய எழுத்தாளர் பிங்கி விரானி, அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அருணாவை கவனித்து வரும் நர்சுகள் கூறும்போது, ÔÔகோமா நிலையில் இருந்தாலும் நாம் சொல்வது அருணா புரிந்து கொள்கிறார். உணவு சாப்பிடுகிறார். அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றனர். பிங்கி விரானி தாக்கல் செய்த மனுவில், ஒரு சில மேற்கத்திய நாடுகளில் கருணைக் கொலை அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். அதே நேரம், கருணைக் கொலையை அனுமதிக்க முடியாது என மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இந்நிலையில் கருணை கொலை அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் ந¦திபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஜி.எஸ். மிஸ்ரா முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அருணா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங¢கள், அவரை கருணை கொலை செய்ய தேவையில்லை என்பதையே காட்டுகின்றன. இதனால் இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கருணை கொலை தொடர்பாக இந்தியாவில் சட்டம் எதுவும் இல்லை. இது தொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பே கருணை கொலை வழக்குகளில் நடைமுறையில் இருக்கும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Popular Post

Tips