சூப்பரான வரகு வெந்தயக்கீரை புலாவ்

chiruthaaneyankalil chaththaana arumaiyaana unavukalai cheyyalaam. inru varaku arichi, venthayakkeeraiyai vaiththu choopparaana pulaav cheyvathu eppadi enru paarkkalaam. thaevaiyaana poarudkal : varaku arichi – oru kap venthayakkeerai – oru kap periya venkaayam – onru thakkaali – onru puthinaa, koththamalliththalai – chirithalavu paddai – chiriya thundu kiraampu – 2 aelakkaay – onru pirijchi ilai – chiriyathu majchalthool – … Continue reading "choopparaana varaku venthayakkeerai pulaav"
choopparaana varaku venthayakkeerai pulaav

சிறுதானியங்களில் சத்தான அருமையான உணவுகளை செய்யலாம். இன்று வரகு அரிசி, வெந்தயக்கீரையை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி – ஒரு கப்
வெந்தயக்கீரை – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – ஒன்று
பிரிஞ்சி இலை – சிறியது
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
சோம்பு – கால் டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – ஒரு கப்.

செய்முறை :

வரகரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் நெய், எண்ணெய்ச் சேர்த்து சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு, கீறிய பச்சைமிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.

இத்துடன் சிறிது புதினா, கொத்தமல்லித்தழை, நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, மஞ்சள்தூள் ஊற, வைத்த வரகரிசி சேர்த்து வதக்கவும்.

பிறகு ஒரு கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர், உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி பிரஷர் வந்ததும் தீயை சிம்மில் வைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

பிரஷர் அடங்கியதும், திறந்து கிளறி, சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான வரகு வெந்தயக்கீரை புலாவ் ரெடி.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Popular Post

Tips