“ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை….தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி”

oru chichuvaanathu thaayin karu varaiyil uruvaana onraam maatham muthal, onpathaam maatham varai thaan ethirkollum cheeraana valarchchiyai kaanalaamaa…. 1. muthal maatham: karu, karuppai chuvarkalil parri pidiththu valarum. chichu moonru paakankalaakath theriyum. muthal paakam: moolai, narampu mandalam, charumam, kan , kaathu, poanravaikalaaka maarum. irandaam paakam:chuvaachak kaddamaippu ,vayiru. munram paakam : ithayam, raththam, thachai,elumpukalaaka maarum. 2. irandaam maatham: chichuvirku mukam uruvaakirathu. kan … Continue reading "“onru muthal onpathu maatham varai….thaayin vayirril chichu valarchchi”"
“onru muthal onpathu maatham varai….thaayin vayirril chichu valarchchi”

ஒரு சிசுவானது தாயின் கரு வறையில் உருவான ஒன்றாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை தான் எதிர்கொள்ளும் சீரான வளர்ச்சியை காணலாமா….

1. முதல் மாதம்: கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும்.
சிசு மூன்று பாகங்களாகத் தெரியும்.

முதல் பாகம்மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும்.

இரண்டாம் பாகம்:சுவாசக் கட்டமைப்பு ,வயிறு.
முன்றம் பாகம் : இதயம், ரத்தம், தசை,எலும்புகளாக மாறும்.

2. இரண்டாம் மாதம்: சிசுவிற்கு முகம் உருவாகிறது. கண் பகுதி குழி தோன்றும். மூளை, இதயம், சுவாசப்பகுதி, கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும். இதயம் மெல்ல செயல்படத் தொடங்கும்.

 1. முன்றாம் மாதம்:உடலை விட இப்போது தலை பெரியதாக இருக்கும். நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறியலாம்.

  4. நான்காம் மாதம்:தலை முடி, புருவம் போன்றவை லேசாக வளர்ந்திருக்கும். கண்கள் மூடி இருக்கும்.

  5. ஐந்தாம் மாதம்: சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார். “லாலுனுகோ” என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் முடப்படும். பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.

  6. ஆறாம் மாதம்: சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். “வெர்னிக்ஸ்” குழந்தையை பாதுகாப்பாய் முடிக் கொள்ளும் . ஆம்னியாட்டிக் திரவத்தில் இருந்து குழந்தை தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும். குழந்தையின் விக்கலை அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

  7. ஏழாம் மாதம்: குழந்தை கண் திறக்கும். எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.

  8. எட்டாம் மாதம்: நகம் வளரும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பை வாயை நோக்கி தலைகீழாக குழந்தை செல்லும்.

  9. ஒன்பதாம் மாதம்: ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும். பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.

Popular Post

Tips