30 வயதை தாண்டிய பெண்களுக்கு முகச் சுருக்கத்தைப் போக்க சில டிப்ஸ்

unkalukku vayathu athikarikkumpoathu, aerpadum charuma paathippukalai thadukkum cheyalpaadukalai charuma paraamarippu enpathaakum. iruppinum unkal charumaththai ilamaiyaaka vaikka neenkal ovvooru ineya kaalaipoaluthum virumpukireerkal enraal, maelum neenkal charumaththin muthirntha thorraththai thadukkum oppanai muraiyai unkal 30-vathu pirantha naalil irunthu thodara vaendum.unkal charumam thoyvadaiyum poathu neenkal charuma paraamarippai kaiyaala vaendum enru avachiyamillai. aanaal aarampaththilaeyae neenkal charuma paraamarippai thodanki viddaal muthirntha, … Continue reading "30 vayathai thaandiya penkalukku mukach churukkaththaip poakka chila dips"
30 vayathai thaandiya penkalukku mukach churukkaththaip poakka chila dips

உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும் செயல்பாடுகளை சரும பராமரிப்பு என்பதாகும். இருப்பினும் உங்கள் சருமத்தை இளமையாக வைக்க நீங்கள் ஒவ்வொரு இனிய காலைபொழுதும் விரும்புகிறீர்கள் என்றால், மேலும் நீங்கள் சருமத்தின் முதிர்ந்த தோற்றத்தை தடுக்கும் ஒப்பனை முறையை உங்கள் 30-வது பிறந்த நாளில் இருந்து தொடர வேண்டும்.உங்கள் சருமம் தொய்வடையும் போது நீங்கள் சரும பராமரிப்பை கையாள வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ஆரம்பத்திலேயே நீங்கள் சரும பராமரிப்பை தொடங்கி விட்டால் முதிர்ந்த, சுருக்கமான போன்ற சரும பிரச்சினைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் 30-வது பிறந்த நாளில் இருந்து நீங்கள் சருமத்தை இளமையாக தக்க வைப்பதற்கான செயல்முறைகளை தொடங்கி விடுவது நல்லது. இது உங்கள் தினசரி வழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். மேலும் முப்பது வயதிற்கு மேல் உங்கள் சருமத்தை பராமரிக்க சில புது சரும பராமரிப்பு சாதனங்கள் மற்றும் சில நிபந்தனைகளை உங்களுக்கு கூறுகிறோம். நீங்கள் இந்த பத்து நிபந்தனைகளை கடைபிடித்தால் உங்கள் சருமம் சுருக்கங்கள் மற்றும் முதிர்ந்த தோற்றம் இல்லாமல் இளமை பொலிவோடு இருக்கும். அதனால் 30 வயதடைந்த பெண்கள் இந்த எளிய சரும பாதுகாப்பு நிபந்தனைகளை படித்து தினசரி செயல்படுத்துதல் வேண்டும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

1, ரெடினாய்டு, சரும பராமரிப்பில் வெளிப்புற இணைப்புத்திசுக்களை (Collagen) மற்றும் தோல் திசுக்களை (Skin Cells) புதிதாக உற்பத்தி செய்கிறது. நீங்கள் 30 வயதானவராக இருந்தால் உங்கள் சரும பராமரிப்பு முறைகளில் கண்டிப்பாக ரெடினாய்டு உபயோகியுங்கள். நீங்கள் ரெடினாய்டு உள்ளடங்கிய சரும பராமரிப்பு சாதனங்களை தேர்ந்தெடுங்கள். ரெடினாய்டு ஒரு சிறந்த முகப்பரு தடுப்பானாக செயல்படுகிறது. இது சருமச் சுருக்கங்கள் வராமல் தடுப்பதோடு முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. மேலும் இது சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

2. உங்கள் சருமம் வயதான தோற்ற்றமடைய காரணம் சருமத்தில் வறட்சியே. எனவே நீங்கள் கட்டாயமாக சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க வேண்டும். அதனால் நீங்கள் முப்பது வயதடைந்ததும் சருமத்திற்கு மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவதை அதிகரிக்கவும். சரும மாய்ஸ்ட்ரைசர்களுக்கு நீங்கள் எடுத்து கொள்ளும் இடைவெளி மிகக் குறைவானதாகவும் எப்போதும் உங்கள் சருமம் நீர்ச்சத்துடை உடையதாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயணங்களின் போதும் கண்டிப்பாக மாய்ஸ்டரைசரை பயன்படுத்த வேண்டும்.

3. நீங்கள் முப்பது வயதை அடைந்திருக்கும் போதே உங்கள் சரும பராமரிப்பு பொருட்களில் சரும முதிர்ச்சியை தடுக்கும் பயனுள்ளவைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய சரும பராமரிப்பு பொருட்களையே மேலும் தொடர்ந்தால் உங்கள் சருமத்திற்கு தேவையான போஷாக்கு கிடைக்காது, அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சரும பராமரிப்பு பொருட்களில் முதிர்ந்த தோற்ற்றத்தை தடுக்கும் மூலக்கூறுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உயர் ரக பிராண்டுகளில் உள்ள சரும பராமரிப்பு பொருட்களில் சரும முதிர்ச்சியை தடுக்கும் பொருட்களை நீங்கள் உபயோகிக்கலாம்.

4. அதிக உறக்கம் இளமையான சரும தோற்றத்தை கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சருமத்தின் முதிர்ச்சியை தடுக்க எனும்போது தூக்கத்திற்கான நேரத்தோடு நீங்கள் உறங்கும் தோற்றமும் மிக முக்கியம். சரும முதிர்ச்சியடையும் வயதுக்குப்பின் நீங்கள் உங்கள் முகத்தை தலையணையில் வைத்து குப்புறப்படுத்தவாறு உறங்குவதால், தலையணையில் முகம் அழுந்தி உங்கள் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். அடுத்து தலையணையிலுள்ள நுண்ணிய அழுக்குகள் உங்கள் சருமத்தின் உள்ளே ஊடுருவி எதிர்மறையான முடிவுகளை தருவதற்கும் வாய்ப்புள்ளது.

5. வயது முதிர்ச்சியையும் பாலின வேறுபாட்டையும் தாண்டி சூரியனின் புற ஊதாக்கதிர்கள் எப்போதுமே உங்கள் சருமத்திற்கு கெடுதல் தரக்கூடியது தான். சரும முதிர்ச்சியை தடுக்கும் சரும பராமரிப்பு முறைகளை தொடங்கியிருப்பின் அதிகமாக வெயிலில் செல்வதை தவிருங்கள். இதனால் உங்கள் சருமம் மேலும் நிலையான இளமைப்பொலிவோடும், சரும நிறம் மாறாமலும் இருக்கும். முப்பது வயதிற்கு மேல் வீட்டிலேயோ அல்லது அலுவலங்களிலோ உள்ளேயே இருந்து வேலை செய்வதை அதிகப்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கும்

6. சரும பராமரிப்பு செயல்முறைகள் முழுமையடைய, நீங்கள் பயன்படுத்தும் சரும பாதுகாப்பு திரவங்களை சருமத்தின் மேல்நோக்கிய முறையில் மசாஜ் செய்வது போல் பூசுங்கள். சரும பராமரிப்புக்காக மாய்ஸ்ட்ரைசர் அல்லது டோனெரை சருமத்தில் கீழ்நோக்கிய முறையில் மசாஜ் செய்தால் சருமத்தின் முதிர்ச்சியான தோற்ற்றம் அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் இவற்றை உபயோகிக்கும்போது மென்மையாக கையாள வேண்டும் அதோடு பொருத்தமான உள்ளடக்கமுள்ள ஒப்பனை பொருட்களில் சமரசம் செய்யக்கூடாது.

7. உடலில் வயதான தோற்றத்தை முதலில் எடுத்துக்காட்டுவது கண்களும் அதன் சுற்றுப்புறமும் தான் சொறி போன்ற அலர்ஜியான கண்ணிமைகள் அல்லது காக்கைச்சுவடு போன்ற கண்ணிமை கோளாறுகள் கண்ணைச் சுற்றியுள்ள சருமத்தை மிகவும் பலவீனமாகவும் சுருக்கங்கள் உடையதாகவும் மாற்றுகிறது. இதற்கு கண்களுக்கு பிரத்யேகமான அதிக பயன்களுடைய சரும முதிர்ச்சி தடுக்கும் சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிப்பது சிறந்த தீர்வாகும். சாதாரண சரும பராமரிப்பு பொருட்கள் கண்களை சுற்றி சரியாக வேலை செய்யாது காரணம் அது உடலின் மிக மென்மையான பகுதியாகும். இதற்காக நீங்கள் கண் மருத்துவர் பரிசோதித்து பரிந்துரைக்கும் கண்களுக்கு பிரத்யேகமான சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிக்கவும்.

8. மேற்கூறிய கடின முயற்சிகள் இருந்தாலும் உங்கள் சருமம் கண்டிப்பாக 30 வயதை கடந்ததும் முதிர்ச்சியை காட்டுகிறதென்றால், நீங்கள் தோல் மருத்துவரிடம் உங்கள் சருமத்தை பரிசோதித்து தக்க மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். எனவே உங்களுக்கு சருமத்தில் எந்த பிரச்சினையும் இல்லாவிடிலும் மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் பரிசோதித்து சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் சருமத்தில் ஏதேனும் பிரச்சினைகளை உணர்ந்தால் வீட்டிலேயே தயாரிக்கும் அல்லது நீங்களே செய்து கொள்ளும் ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவதைவிட தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.

9. 30 வயதை கடந்தவர்கள், சரும பராமரிப்பை மட்டும் கருத்தில் கொண்டிருக்க கூடாது. முடிகளும் முதிர்ச்சி அடைகிறது, எனவே சரும பராமரிப்போடு சிறந்த மற்றும் உரிய கேசத்திற்கான பராமரிப்பையும் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் சருமத்தை விட முடியின் முதிர்ச்சி உங்களுக்கு இன்னும் பத்து வயது கூடுதலாக ஆனது போன்ற ஒரு தோற்றத்தை காட்டிவிடும். ஆதலால் 30 வயது கடந்தவர்களுக்கு சரும பராமரிப்போடு கேசத்திற்கான பராமரிப்பிலும் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

10. இளமையாக தெரிவதற்கான மிக முக்கியமாக செய்ய வேண்டிய அடுத்த செயல், நல்ல அடர்த்தியான புருவங்களை பராமரிப்பதாகும். மிக ஒல்லியான அடர்த்தி குறைந்த புருவங்கள் உள்ளவர்கள் வயது முதிர்ந்தாற்போல தோற்றமளிப்பார்கள். அதனால், முப்பது வயதிற்கு பிறகு அடர்த்தியான புருவங்களை பராமரியுங்கள். இயற்கையாகவே புருவம் அடர்த்தியாக இல்லாதவர்கள் ஐப்ரோ பென்சில் அல்லது அது போன்ற அழகு சாதனங்களை பயன்படுத்துங்கள். எது எப்படியானாலும் புருவங்கள் சரியான வடிவத்தில் இருக்க வேண்டும் புருவங்களை அடர்த்தியாக முயற்சியில் அவை வடிவமற்று அகற்று தோற்றமளிக்கும் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

Popular Post

Tips