குடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்

maavu pichaiyumpoathu koathumai maavudan oru daepilspoon makkaachchoala maavum, arai daepilspoon ravaiyum, arai  deespoon charkkaraiyum chaerththuk kalakki, antha maavil poori cheythaal miruthuvaaka iruppathudan poori uppalaaka varum. * chappaaththiyoa, pooriyoa cheyyumpoathu koathumai maavil chaatham vadiththa neer chaerththu maavai pichainthu cheythaal mikavum  chuvaiyaaka irukkum. * athika kanamulla kallai thochaikkum, kana millaatha melithaana kallai chappaaththikkum upayoakikka vaendum. * chaatham … Continue reading "kudumpa thalaivikalukkaana chamaiyal dips"
kudumpa thalaivikalukkaana chamaiyal dips

மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை  டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவில் பூரி செய்தால் மிருதுவாக இருப்பதுடன் பூரி உப்பலாக வரும்.

* சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும்  சுவையாக இருக்கும்.

* அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.

* சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சேர்த்தால்  மேலும் குழையாமல் இருக்கும்.

* உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
* குழம்பு, பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் தூவினால்  சரியாகிவிடும்.

* ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள்  வராது.
* வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

* காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள  வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

* காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
* கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை  அல்வாவைவிட  ருசியாக இருக்கும்.

 

Popular Post

Tips