இல்லற பந்தத்திற்கு  ஒவ்வாத இராசிகள்

poathuvaaka ovvooru raachikkum oruchila adippadai kunaathichayankal irukkum. ithu oru chilar maththiyil vaerupaddum irukkum. thirumana pantham enru varum poathu irandu raachikal onraaka inaiyum poathu anku chila nanmai, theemaikal irandum kalanthu vaayppukal irukkinrana. aeraththaala ithu kanethaththai poalath thaan. oruchila thiyarikal poarunthum, oruchila thiyarikal poarunthaathu. intha vakaiyil oruchila raachikal onrinainthaal avarkal iyalpaakavae makilchchiyaaka iruppaarkal, oruchila raachikal munnukkuppin muranaaka iruppaarkal. … Continue reading "illara panthaththirku  ovvaatha iraachikal"
illara panthaththirku  ovvaatha iraachikal

பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் இருக்கும். இது ஒரு சிலர் மத்தியில் வேறுபட்டும் இருக்கும். திருமண பந்தம் என்று வரும் போது இரண்டு ராசிகள் ஒன்றாக இணையும் போது அங்கு சில நன்மை, தீமைகள் இரண்டும் கலந்து வாய்ப்புகள் இருக்கின்றன. ஏறத்தாழ இது கணிதத்தை போலத் தான். ஒருசில தியரிகள் பொருந்தும், ஒருசில தியரிகள் பொருந்தாது.

இந்த வகையில் ஒருசில ராசிகள் ஒன்றிணைந்தால் அவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஒருசில ராசிகள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பார்கள். இதில் இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள் எவையென இனிப் பார்க்கலாம்.

சிம்மம், கன்னி
இந்த இரு ராசிகளுக்கு மத்தியில் கவர்ச்சியின் அடிப்படையில் ஈர்ப்பு அதிகரிக்கும். தொடக்கத்தில் இவர்களது இல்லறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், போக, போக சிம்மத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் இவர்களது உறவில் மன உளைச்சல் அதிகரிக்கும்.

மேஷம், விருச்சிகம்
இரண்டு ராசிக்காரர்களுமே பலம் மிக்கவர்கள், கட்டுப்பாட்டுடன் இருக்கக் கூடியவர்கள், தலைமை வகிக்க விரும்புவார்கள். இவர்களுக்குள் விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாவிட்டால் உறவில் விரிசல் அதிகரிக்கும்.

ரிஷபம், கும்பம்
இந்த இரண்டு ராசிகளுமே சுத்தமாக பொருந்தாதவை எனக் கூறப்படுகிறது. ரிஷபம் காதல், அன்பு, அழகு, பொறுமை பண்புகள் கொண்டிருக்கும். கும்பம் எதிர்பாராத விஷயங்களைச் செய்யும் பண்பு கொண்டது. ரிஷபம் விட்டுக்கொடுத்து வந்தாலும் கும்பம் ஏற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்காது. குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம், பிரச்னைகள் ஏற்படும்.

மிதுனம், கடகம்
இவர்கள் மிகவும் சாந்தமான வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்கள். இருவருக்குமே நகைச்சுவை குணம் அதிகமாக இருக்கும். மிதுனம் பொறுமையாக இருக்க வேண்டும், பாதுகாப்பளிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். கடகம் பதிலுக்கு காதலை மிகுதியாக அளித்தால் மட்டுமே இவர்களுக்குள் எந்த பிரச்னையும் வராது.

தனுசு, மகரம்
இவர்களுக்குள் தாம்பத்தியம் பெரிய பிரச்னையாக இருக்கும். இல்லறம் பற்றிய திட்டமிடுதலில் குழப்பங்கள் ஏற்படும். இந்த இரண்டையும் இவர்கள் சரி செய்து கொண்டால் இல்லறம் சிறக்கும்.

கன்னி, மிதுனம்
இவர்களுக்கு பணம் ஓர் பெரிய பிரச்னையாக இருக்கும். மிதுனம் அன்பு மட்டும் போதுமானது என்று நினைப்பவர்கள். ஆனால், கன்னி நாளைக்கான சேமிப்பு அவசியம் எனக் கருதும் குணம் கொண்டவர்கள் இந்தக் காரணத்தினாலேயே இவர்களின் உறவில் விரிசல் உண்டாகும்.

மீனம்சிம்மம் 
ஆரம்பத்தில் இந்த ஜோடி மிகவும் காதலுடன் கொஞ்சிக் குலாவிக் கொள்ளும். ஆனால், நாள்பட நாள்பட இவர்களது உறவில் மோகம் குறையும் போது பிரிவு அதிகரிக்க ஆரம்பிக்கும். சிம்மத்தின் பேரார்வத்தை மீனம் கண்டுக் கொள்ளாமல் போகும் போது தான் பிரச்னை அதிகரிக்கும்.

மிதுனம், விருச்சிகம்
இருவருமே வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். இவர்கள் மனம் விட்டுப் பேச நேரத்தை ஒதுக்காமல் இருக்கும் வரை உறவில் ஓர் பற்று இருக்காது. இதனால், இவர்கள் மத்தியிலான இடைவெளியும், மன வருத்தமும் தான் அதிகரிக்கும்.

கும்பம், கடகம்
கும்பம் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை, கடகம் தந்து தான் ஆகவேண்டும். இவர்கள் மத்தியில் எழும் நம்பகத்தன்மை குறைபாடு தான் இவர்களது உறவை சீர்கெடுத்துவிடும்.

துலாம், மீனம்
இருவருக்குள் உண்டாகும் பிரச்னையை கையாளத் தெரியாமல் சின்ன விஷயத்தைக் கூட பெரிதாக்கிவிடுவார்கள். இதுவே இவர்களது உறவை பாழாக்கிவிடும்.

சிம்மம், ரிஷபம் 
இவர்கள் இருவரின் மத்தியிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும். தங்கள் மீதே அதிக பெருமிதம் கொள்வார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் நாள்பட உறவில் விரிசல் அதிகரிக்கும்.

மேஷம், கடகம்
இவர்கள் இருவரும் சிறந்த ஜோடியாகத் திகழ முடியும். உணர்ச்சி ரீதியாக இருவருமே சிறந்து விளங்கக் கூடியவர்கள். ஆனால், மேஷம் உலகம் சுற்ற விரும்பும், வெளியிடங்களுக்குச் சென்று வர அலைபாயும். ஆனால், கடகம் வீட்டினுள்ளே சமைத்து சாப்பிட்டுவிட்டு உறங்க நினைக்கும். சரியான புரிதல் இல்லாமல் இருப்பது இவர்களது உறவில் விரிசல் அதிகப்படுத்தும்.

 

Popular Post

Tips