ஷங்கர் இயக்கத்தில்(எந்திரன்2ல் ) நடிக்கும்  ஏமி ஜாக்சன்

iyakkunar shankar padaththil nadikkum aemi jakchanen pukaippadaththai, chamookavalaiththalaththil pakirnthullaar. maelum, 2.0 padaththin kadaichip paadalukkaana padappidippu inrumuthal thodankukirathu enrum avar ariviththullaar. chila naalkalukku munpu 2.0 padaththin 3di maekkin veediyoavai veliyiddaar. athaiyaduththu inthap pukaippadaththai veliyiddullaar shankar. padappidippu aarampiththa tharunaththilirunthu inthap pukaippadaththai unkaludan pakirnthukolla aavalaaka irunthaen. 2.0 padaththil ennudaiya kathaapaaththirath thorram ithuthaan enru koori nadikai aemi jakchanum appukaippadaththaith … Continue reading "shankar iyakkaththil(enthiran2l ) nadikkum  aemi jakchan"
shankar iyakkaththil(enthiran2l ) nadikkum  aemi jakchan

இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்கும் ஏமி ஜாக்சனின் புகைப்படத்தை, சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், 2.0 படத்தின் கடைசிப் பாடலுக்கான படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு 2.0 படத்தின் 3டி மேக்கிங் வீடியோவை வெளியிட்டார். அதையடுத்து இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷங்கர்.

படப்பிடிப்பு ஆரம்பித்த தருணத்திலிருந்து இந்தப் புகைப்படத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருந்தேன். 2.0 படத்தில் என்னுடைய கதாபாத்திரத் தோற்றம் இதுதான் என்று கூறி நடிகை ஏமி ஜாக்சனும் அப்புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் – ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

வசனம் – ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. 2.0, ஜனவரி மாதம் 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular Post

Tips