லக்‌ஷ்மியின் என்டிஆர்’ படத்தில் பிரகாஷ்ராஜ் தான் என்டிஆரா?

charchchaikalukkup peyar poana iyakkunaraana raamkoapaal varmaa, chila maathankalukku mun thanathu aduththa puthiya thiraippadamaaka, ‘lak‌shmiyin en di aar’ enroru thiraippadaththai ariviththirunthaar. padaththin peyarai ariviththaarae thavira, athil yaarellaam nadikkavirukkiraarkal? enpathu kuriththellaam entha vithamaana thakavalkalum ithuvarai veliyidavillai. aanaal chameepaththil, en di aarin vaalkkaich chiththiramaana anthath thiraippadaththil, en di aar vaedaththil nadikar pirakaashraaj thaan nadikkavirukkiraar ena dolivud oodakankalil cheythikal veliyaakik kondirunthana. … Continue reading "lak‌shmiyin endiaar’ padaththil pirakaashraaj thaan endiaaraa?"
lak‌shmiyin endiaar’ padaththil pirakaashraaj thaan endiaaraa?

சர்ச்சைகளுக்குப் பெயர் போன இயக்குனரான ராம்கோபால் வர்மா, சில மாதங்களுக்கு முன் தனது அடுத்த புதிய திரைப்படமாக, ‘லக்‌ஷ்மியின் என் டி ஆர்’ என்றொரு திரைப்படத்தை அறிவித்திருந்தார்.

படத்தின் பெயரை அறிவித்தாரே தவிர, அதில் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள்? என்பது குறித்தெல்லாம் எந்த விதமான தகவல்களும் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் சமீபத்தில், என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரமான அந்தத் திரைப்படத்தில், என் டி ஆர் வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் நடிக்கவிருக்கிறார் என டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

ஆனால், தற்போது அந்தச் செய்திகள் எதுவும் உண்மையில்லை என ராம்கோபால் வர்மா அறிவித்திருக்கிறார்.  ‘லக்‌ஷ்மியின் என் டி ஆர்’ திரைப்படத்தின் மையக்கதை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களால் என் டி ஆர் என அன்பொழுக அழைக்கப் படும்  பழம்பெரும் நடிகரும், முன்னாள் ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வருமான நந்தமூரி தாரக ராமாராவின் வாழ்வில் அவரது இரண்டாவது மனைவியான லக்‌ஷ்மி பார்வதியின் வருகையைத் தொடர்ந்து அவரது அரசியல் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

என் டி ஆர், லக்‌ஷ்மி பார்வதியைத் திருமணம் செய்து கொண்டதில் அவரது குடும்பத்தினருக்கு அதிருப்தியே நிலவியது. எனவே அதையொட்டிய வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படியாகக் கொண்டு வெளிவர இருக்கும் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு ஆந்திரத்தில் பஞ்சமில்லை.

இந்நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் , இதுவரை வெளிவந்த தகவல்கள் தவறானவை என்றும் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

Popular Post

Tips