புது கெட்டப்பில் அசத்தும் நாகார்ஜுன்

thamilil ‘ithayaththaith thirudaathae’ thiraippadam moolamaaka aeraalamaana ilam rachikaikalin anpukkup paaththiramaakip poanavaraana naakaarjunaavukku vayathu aera, aera vayathu vithyaachaminri pen rachikaikal athikariththuk kondae thaan poakiraarkal. atharkaerraar poala avarum thanathu anpaana rachikaikalukkup pidiththa vakaiyilirukkum thanathu thorraththil ithu varaiyilum perithaaka entha maaruthalum cheythu kondathae illai. aanaal tharpoathu velivaravirukkum thanathu puthiya thiraippadamaana  ‘raajukaari kathi 2’ padappidippu vaelaikal anaiththum mudinthu dichampar 13 … Continue reading "puthu keddappil achaththum naakaarjun"
puthu keddappil achaththum naakaarjun

தமிழில் ‘இதயத்தைத் திருடாதே’ திரைப்படம் மூலமாக ஏராளமான இளம் ரசிகைகளின் அன்புக்குப் பாத்திரமாகிப் போனவரான நாகார்ஜுனாவுக்கு வயது ஏற, ஏற வயது வித்யாசமின்றி பெண் ரசிகைகள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறார்கள்.

அதற்கேற்றாற் போல அவரும் தனது அன்பான ரசிகைகளுக்குப் பிடித்த வகையிலிருக்கும் தனது தோற்றத்தில் இது வரையிலும் பெரிதாக எந்த மாறுதலும் செய்து கொண்டதே இல்லை.

ஆனால் தற்போது வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படமான  ‘ராஜுகாரி கதி 2’ படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து டிசம்பர் 13 ஆம் தேதி பட வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில் முகத்தில் ஃபுல் சேவ் செய்து, புது கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். என்றைக்கும் இல்லாத புது ஸ்டைலாக இருக்கிறதே? என்ற கேள்விக்கு;

‘ஆமாம், அடுத்ததாக உடனடியாக எந்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதாலும், மகன் திருமணம் நெருக்கத்தில் இருப்பதாலும்… ஹாயாக இப்படி ஒரு கெட்டப். இதைப் பார்த்து விட்டு என் பெண் ரசிகைகளும் பெரிதாக ஆட்சேபிக்காமல், இதையும் ரொம்பவே ரசிக்கத் தொடங்கி விட்டதால் வசதியாக அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

என்கிறார் இந்த சூப்பர் கூல் ஹீரோ! தற்போது தான் நடித்து வரும் திரைப்படங்களில் பழைய ரொமாண்டிக் லவ்வர் பாயாக இல்லாமல் விதம், விதமான வித்யாசமான வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பது தனக்கு திருப்தியளித்து வருவதாகவும், இன்னும் எத்தனை நாளைக்குத் தான் ரொமாண்டிக்காக டூயட் பாடிக் கொண்டே இருப்பது?

அதற்குத்தான் தெலுங்கில் இப்போது நிறைய இளம் நடிகர்கள் வந்து விட்டார்களே! அதனால் நான் வித்யாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அம்மாதிரியான வேடங்கள் என்னைத் தேடி வருவது குறித்து எனக்குச் சந்தோசமே என்கிறார் நாகார்ஜுனா!

சரி.. மறுமகளோடு நடித்து வெளிவரவிருக்கும் ராஜூகாரி கதி 2 பற்றி நாகார்ஜுனா என்ன சொல்கிறார் என்று பாருங்கள்;

சமந்தா சீக்கிரமே எங்கள் வீட்டு மறுமகளாகவிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு திகில் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். சமந்தாவின் நடிப்பைப் பற்றி புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது. ராஜுகாரி கதி 2 ல் கடைசி 20 நிமிடங்கள் படம் பார்ப்பவர்கள் அத்தனை பேருமே சமந்தாவைப் பார்த்து நிச்சயம் பயந்து போவார்கள். அப்படி தத்ரூபமாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் என்கிறர். இந்தப் படத்தை வெறுமே திகில் படம் என்பதை விட குடும்பப் படம் என்று தான் சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ரசிக்கும் வண்ணமாகத்தான் இந்தப் படம் தயாராகியுள்ளது. படம் பார்த்த பிறகு நீங்களே அதை ஒப்புக் கொள்வீர்கள் என்கிறார்.

சரி படம் வந்தால் தெரிந்து விடப்போகிறது!

அது மட்டுமல்ல…இந்தத் திரைப்படம் முன்னதாக வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தாமதமாகிப் பின் தற்போது தீபாவளி விடுமுறையை முன் வைத்து வெளிவரவிருக்கிறது. தாமதமான வெளியீட்டுக்குக் காரணம். படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முற்றாக திருப்தியளிக்கும் வண்ணம் முடியாமலிருந்ததே என்கிறார் நாகார்ஜுன்

 

Popular Post

Tips