வெஜிடபிள் பிரியாணி

thaevaiyaana poarudkal   1 kiloa arichi, oru thaenkaay, 250 kiraam venkaayam, 15 pachchai milakaay, 200 kiraam kaali pilavar, 100 kiraam poondu, 1 kaddu koththamalli, 100 kiraam urulaik kilanku, ijchi chiruthundu, thaevaiyaana alavu puthinaa, 50 kiraam kaerad, 50 kiraam peens, 10 aelakkaay, 10 kiraampu, 100 kiraam paddaane, 100 kiraam daaldaa, 1thundu ilavankam, 100 kiraam nallannaiy, thaevaiyaana … Continue reading "vejidapil piriyaane"
vejidapil piriyaane

தேவையான பொருட்கள்

 

1 கிலோ அரிசி,
ஒரு தேங்காய்,
250 கிராம் வெங்காயம்,
15 பச்சை மிளகாய்,
200 கிராம் காலி பிளவர்,
100 கிராம் பூண்டு,
1 கட்டு கொத்தமல்லி,
100 கிராம் உருளைக் கிழங்கு,
இஞ்சி சிறுதுண்டு,
தேவையான அளவு புதினா,
50 கிராம் கேரட்,
50 கிராம் பீன்ஸ்,
10 ஏலக்காய்,
10 கிராம்பு,
100 கிராம் பட்டாணி,
100 கிராம் டால்டா,
1துண்டு இலவங்கம்,
100 கிராம் நல்லெண்ணைய்,
தேவையான அளவு உப்பு,
கால் தேக்கரண்டி கேசரிப் பவுடர்

 

செய்முறை:

 

அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

 

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரிசி நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

Popular Post

Tips