அருணாக்  கயிறு அணிவது ஏன்?

aan kulanthaiyoa, pen kulanthaiyoa enthak kulanthaiyaa irunthaalum avankavanka vachathikku thakkapadi thankam, velli, verum karuppuk kayirunnu kulanthai pirantha chila naadkalil athanooda iduppula kadromae araijan kayiru,  atha aen kadrom theriyumaa unkalukku ? aayiram vanthaalum chari arunaakkayiru arunthaalum chari !!! elupathu enpathukalil piranthavarkalai kaeddup paarunkal. appoathellaam pulakkaththil iruntha vaedikkaiyaana oru palamoali, aayiram vanthaalum chari arunaakkayiru anthaalum chari enru chollikkondae, maarkali … Continue reading "arunaak  kayiru anevathu aen?"
arunaak  kayiru anevathu aen?

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எந்தக் குழந்தையா இருந்தாலும் அவங்கவங்க வசதிக்கு தக்கபடி தங்கம், வெள்ளி, வெறும் கறுப்புக் கயிறுன்னு குழந்தை பிறந்த சில நாட்களில் அதனோட இடுப்புல கட்றோமே அரைஞாண் கயிறு,  அத ஏன் கட்றோம் தெரியுமா உங்களுக்கு ?

ஆயிரம் வந்தாலும் சரி அருனாக்கயிறு அறுந்தாலும் சரி !!!

எழுபது எண்பதுகளில் பிறந்தவர்களை கேட்டுப் பாருங்கள். அப்போதெல்லாம் புழக்கத்தில் இருந்த வேடிக்கையான ஒரு பழமொழி, ஆயிரம் வந்தாலும் சரி அருனாக்கயிறு அந்தாலும் சரி என்று சொல்லிக்கொண்டே, மார்கழி குளிரில் சில்லென்று இருக்கும் தொட்டித் தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றிக்கொள்வார்களாம். அப்போதெல்லாம் விறகடுப்புதானே! வீட்டிற்கு நான்கைந்து குழந்தைகள் எனில், ஆளாளுக்கு தனித் தனியாய் யார் வெந்நீர் வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பிள்ளைகளுக்கு?!

இந்தப் பழமொழியில் அரைஞாண் கயிறு ஏன் வருகிறது? அரைஞாண் கயிறு ஏன்  அறுந்து விழ வேண்டும் என்று யோசித்தீர்களா? குளிரில் உடல் விறைக்கும்போது இடுப்பில் கட்டி இருக்கும் அரைஞாண் கயிறு இறுக்கமாகி அறுந்து விழும் சூழல் வரலாம்.

கைக்குழந்தைகளின்  போஷாக்கை அளக்க உதவும் அரைஞாண் கொடிகள்!

குளிரில் உடல் விறைத்தால் மட்டுமே அரைஞாண் கயிறு அறுந்து விழுவதில்லை, உடல் பருமன் அதிகரித்தாலும்கூட இடுப்பின் சுற்றளவு மிகுந்து அதனாலும் கயிறு அறுந்துபோகும் சூழல் வரும். வெறும் கறுப்புக் கயிரென்றால் அறுந்து விழும். தங்கமோ வெளியோ என்றால், இடுப்பைச் சுற்றி தழும்பாகும் அளவுக்கு இடுப்பை இறுக்கிப் பிடிக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது?! இந்த அரைஞாண் கயிற்றின் தத்துவம் பற்றிய ஆராய்ச்சியை அந்தக் காலத்திலிருந்து எடுத்துக்கொண்டால், குழந்தை பிறந்த சில நாட்களில் அதன் எடையை அளவிட நம் முன்னோர்கள் இந்த அரைஞாண் கயிறு அணியும் வழக்கத்தை கண்டுபிடித்திருப்பார்கள். இந்த தகவலை டாக்டர்ஹே மந்த் மற்றும் டாக்டர் அர்ச்சனா அவர்கள் உலக குழந்தைகள் நலத்திற்காக வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வுப் புத்தகம் நமக்களிக்கிறது .

மருத்துவமா? மூடநம்பிக்கையா!

இந்தியாவில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் குழந்தை பிறந்து ஏழாம்நாளில் இந்தக் கயிற்றை அணிவிக்கிறார்கள், ஆண்கள் என்றால் அவர்களது இறப்பு வரை இந்த கயிற்றை அணியும் வழக்கம் நீடிக்கிறது. பெண்களுக்கு அவர்கள் பூப்படையும் பருவம் வரையிலும் தொடரும் இந்த வழக்கம், பிறகு அற்றுப்போய் விடுகிறது.

குழந்தைகளை திருஷ்டியில் இருந்து காக்க  தாயத்துகளில் அடைக்கப்படும் தொப்புள்கொடிகள்!

தொப்புள் கொடி உறவு – தொப்புள் கொடி உறவு என்று  தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சென்ட்மென்ட் வசனம் பேசுகிறார்களே அந்த தொப்புள் கொடிக்கும், இந்த அரைஞாண் கயிறுக்கும் ஒரு பந்தம் உண்டு,  தாயின் வயிற்றில் இருக்கும் வரை குழந்தைக்கு சாப்பாடெல்லாம் எந்த வழியாகச் செல்லும் தெரியுமா? அம்மா என்ன சாப்பிட்டாலும் ப்ளாசண்டா என்று சொல்லப்படற இந்த தொப்புள் கொடி வழியாகத்தான் குழந்தைக்கு அந்த உணவு போய்ச் சேரும்.

அம்மாவின் கருப்பையில் குழந்தை போஷாக்கா வளர உதவற இந்த தொப்புள் கொடியை, குழந்தை பிறந்து மண்ணில் விழுந்த அடுத்த கணமே நறுக்கி நீக்கிடறாங்க. அப்படி நீக்கப்படும் தொப்புள்கொடியை நம்ம மக்கள் காலங்காலமா சென்டிமென்டலா என்ன செய்றாங்கன்னா, வெள்ளியிலோ தங்கத்திலோ சின்னதா ஒரு தாயத்து செய்து, அதில் இந்த தொப்புள் கொடியை வைத்து மூடி குழந்தையோட அரைஞாண் கயிற்றில் கோர்த்து அதன் இடுப்பில் கட்டிவிடறாங்க. இப்படி கட்டிவிடறதன் மூலமா குழந்தையை காத்து, கருப்பு, திருஷ்டி போன்ற தீய சக்திகள் அணுகாதுன்னு நம்பறாங்க. இந்தப் பழக்கம் இப்பவும் நம்ம ஊர்களில் தொடருது. சிலர் அரைஞாண் கயிற்றில் கட்டி விடுவாங்க. சிலர் குழந்தையோட கழுத்திலும் இப்படி தாயத்துகளை கட்டி விடுவது உண்டு. இது ஒருவிதமான   நம்பிக்கை.

 

Popular Post

Tips