காய்கறி உப்புமா

thaevaiyaana poarudkal:   ravai 1 kap periya venkaayam 2 kaerad narukkiyathu 1 kap thakkaali 2 pachchai milakaay 5 peens narukkiyathu 1 kap pachchai paddaane arai kap munthiri paruppu elumichchai chaaru chirithalavu lavankam, paddai, majchal thool koththumalli, karivaeppilai daaldaa allathu venney   cheymurai:   muthalil narukkiya kaerad, peens, pachchai paddaaneyai nanraaka aviththu eduththu kollavum.   vaanaliyil … Continue reading "kaaykari uppumaa"
kaaykari uppumaa

தேவையான பொருட்கள்:

 

ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 2
கேரட் நறுக்கியது 1 கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் 5
பீன்ஸ் நறுக்கியது 1 கப்
பச்சை பட்டாணி அரை கப்
முந்திரி பருப்பு
எலுமிச்சை சாறு சிறிதளவு
லவங்கம், பட்டை, மஞ்சள் தூள்
கொத்துமல்லி, கறிவேப்பிலை
டால்டா அல்லது வெண்ணெய்

 

செய்முறை:

 

முதலில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை நன்றாக அவித்து எடுத்து கொள்ளவும்.

 

வாணலியில் வெண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை நன்றாக சிவக்க வறுக்கவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கவும்.

 

இதனுடன் அவித்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பின்னர் தக்காளி, லவங்கம், கரம் மசாலா, பட்டையை சேர்க்கவும். 2 நிமிடம் வேக விடவும்.

 

தனியாக ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து இதில் ஊற்றி உப்பு போடவும். பின்னர் ரவையை சிறிது சிறிதாக கொட்டி நன்றாக கலக்கவும். நன்றாக திரண்டு கெட்டியாக வந்தவுடன் மீதமிருக்கும் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு கலந்து ஆறவிடவும்.

Popular Post

Tips