விஜய்க்கு அடுத்து :உதயநிதி ஸ்டாலின்

charavanan irukka payamaen, poathuvaaka emmanachu thankam padankal moolamaaka pi and chi aadiyanchidam vekuvaaka varavaerpaip perra uthayanethiyin aduththa rileesaka velivaravirukkum ‘ippadai vellum’ thiraippadam maldi plaks aadiyansaiyum chaerththu daarkked cheythirukkirathu. navamparil rileesakum ena ethirpaarkkappadum ‘ippadai vellum’ padaththai kowrav naaraayanan iyakkiyullaar. chameepaththil velivantha ippadaththin dirailar rachikarkalidaiyae nalla varavaerpaip perrullathu. thayaarippaalaraaka thanathu payanaththaith thuvanki tharpoathu herovaaka varichaiyaaka padam cheythu … Continue reading "vijaykku aduththu :uthayanethi sdaalin"
vijaykku aduththu :uthayanethi sdaalin

சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் படங்கள் மூலமாக பி அன்ட் சி ஆடியன்ஸிடம் வெகுவாக வரவேற்பைப் பெற்ற உதயநிதியின் அடுத்த ரிலீஸாக வெளிவரவிருக்கும் ‘இப்படை வெல்லும்’ திரைப்படம் மல்டி ப்ளக்ஸ் ஆடியன்ஸையும் சேர்த்து டார்க்கெட் செய்திருக்கிறது.

நவம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் ‘இப்படை வெல்லும்’ படத்தை கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்கி தற்போது ஹீரோவாக வரிசையாக படம் செய்து வரும் உதயநிதி அடுத்ததாக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘7 கிணறு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘இரும்புத்திரை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார்.

‘7 கிணறு’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ‘விக்ரம் வேதா’ புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

 

Popular Post

Tips