மீண்டும் காக்கிச்சட்டை போடும் அஜித்?

ajith nadippil veliyaana ‘vivaekam’ padam verrikaramaaka 50 naadkalai kadanthu oadikkondirukkirathu. ippadaththin verriyai thodarnthu, meendum chivaa iyakkaththil nadikka iruppathaaka cheythikal veliyaana vannam ullathu. chameepaththil chivaa-ajith kooddaneyil uruvaakum padam varalaaru chammanthappadda kathai enru koorappaddathu. innelaiyil, tharpoathu ivarkal kooddaneyil uruvaaka irukkum padam poalees kathai enru thakaval veliyaakiyullathu. maelum, ajith nadippil veliyaana ‘aajchanaeyaa’, ‘mankaaththaa’, ‘ennai arinthaal’ pada paaneyil kaakki … Continue reading "meendum kaakkichchaddai poadum ajith?"
meendum kaakkichchaddai poadum ajith?

அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

சமீபத்தில் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகும் படம் வரலாறு சம்மந்தப்பட்ட கதை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் போலீஸ் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித் நடிப்பில் வெளியான ‘ஆஞ்சநேயா’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ பட பாணியில் காக்கி சட்டை அணிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் சிவா இயக்கிய முதல் படம் ‘சிறுத்தை’. இதில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால், அஜித்தை வைத்து போலீஸ் படம் இயக்க இருப்பதாக சொல்கிறார்கள்.

தற்போது ஓய்வில் இருக்கும் அஜித், தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Popular Post

Tips