நாக தோஷத்தை விரட்டும் வழிமுறைகள்

kaluththil maalaip poadduk kondu, athaavathu kodi chuththi kulanthaip pirappathu poanravaiyum ellaam naaka thoshaththinaal aerpaduvathu enpathu nampikkai. raaku – kaethuvin olikkarrai, athaavathu kirakanankalaal paathikkappadupathanaal aerpadum vilaivukalai naaka thosham enkirom. naaka thosham ullavarkal, thankalaiyum, thankalin chanthathikalaiyum paathippukalil irunthu kaaththuk kolla parikaaram onrinai poakar chiththar thanathu ”poakar 12000” noolil kooriyirukkiraar. intha parikaaraththai varudaththin kurippidda oru naalil maddumae cheythida … Continue reading "naaka thoshaththai viraddum valimuraikal"
naaka thoshaththai viraddum valimuraikal

கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது போன்றவையும் எல்லாம் நாக தோஷத்தினால் ஏற்படுவது என்பது நம்பிக்கை.

ராகு – கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம்.

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார்.

இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாக சதுர்த்தி திதி” ஆகும்.

நாக சதுர்த்தி திதி அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.

நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.

நாகதோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்.

Popular Post

Tips