குடும்பங்களின் ஆன்மீகம்

aanmeekam ennum chol palavithamaana poarulkalil payanpaduththappadukirathu. atharkup palvaeru varaiyaraikal valankappadukinrana. nammaip poaruththavarai, iraiyuravin velippaadae aanmeekam enru churunkach chollalaam. iraivanoodu oruvar kollum thaneppadda uravu ennum anupavaththai avar eppadi velippaduththukiraaro athuvae avarathu aanmeekam enpathu athan vilakkam. aanmeekam enpathu thane naparkalukkum uriyathu, kulukkalukkum uriyathu. thuravikalin aanmeekam, maraimaavaddak kurukkalin aanmeekam, aachiriyarkalin aanmeekam enru pala paarvaikalil ithu parimaanam edukkirathu. antha … Continue reading "kudumpankalin aanmeekam"
kudumpankalin aanmeekam

ஆன்மீகம் என்னும் சொல் பலவிதமான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப் பல்வேறு வரையறைகள் வழங்கப்படுகின்றன. நம்மைப் பொறுத்தவரை, இறையுறவின் வெளிப்பாடே ஆன்மீகம் என்று சுருங்கச் சொல்லலாம். இறைவனோடு ஒருவர் கொள்ளும் தனிப்பட்ட உறவு என்னும் அனுபவத்தை அவர் எப்படி வெளிப்படுத்துகிறாரோ அதுவே அவரது ஆன்மீகம் என்பது அதன் விளக்கம்.

ஆன்மீகம் என்பது தனி நபர்களுக்கும் உரியது, குழுக்களுக்கும் உரியது. துறவிகளின் ஆன்மீகம், மறைமாவட்டக் குருக்களின் ஆன்மீகம், ஆசிரியர்களின் ஆன்மீகம் என்று பல பார்வைகளில் இது பரிமாணம் எடுக்கிறது. அந்த வகையில், குடும்பங்களுக்கும் ஓர் ஆன்மீகத்தை உருவாக்கலாம், வாழலாம். இதுவும் குடும்பங்கள் வாழும் நாடு, சூழல், பண்பாடு என்ற தளங்களைப் பொறுத்து மாறுபடலாம்.

இந்த முன்னுரையுடன் இங்கே இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழகத் திருச்சபையின் குடும்பங்கள் வாழும் சூழலுக்கேற்ற ஆன்மீகம் ஒன்றை உருவாக்கலாம். அதன் நடைமுறைத் திட்டங்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு குடும்பத்தின் ஆன்மீகமும் நான்கு தளங்களில் இயங்க வேண்டும். நான்கு தூண்கள் இணைந்து ஒரு கட்டடத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல, குடும்பங்களின் ஆன்மீகமும் இந்த நான்கு தளங்களில் இணையாக இயங்கினால்தான் குடும்பங்களின் ஆன்மீகம் நிலையானதான, சமனானதாக அமையும். நினைவில் கொள்ள வசதியாக இந்த நான்கு தளங்களும் “ந” என்னும் எழுத்தில் தொடங்குகின்றன.

நம்பிக்கை:
நம்பிக்கை என்பது இறைப் பற்றைக் குறிக்கிறது. விசுவாசம் என்னும் சொல்லே விவிலியத்தின் புதிய மொழிபெயர்ப்பில் நம்பிக்கை என்று வழங்கப்படுவதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். கத்தோலிக்கக் குடும்பங்களின் அடித்தளமாக, மூலைக்கல்லாக கிறித்தவ இறை நம்பிக்கை அமைய வேண்டும். அந்த இறை நம்பிக்கையைப் பின்வரும் வழிகளில் குடும்பங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

அன்றாட குடும்ப செபம்:

ஆன்மீகத்தின் அடித்தளம் செபம்தானே! நாள்தோறும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து குறைந்தது 10 நிமிடங்களாவது இறைவேண்டல் செய்யாவிட்டால் அங்கே ஏது ஆன்மீகம்?

திருப்பலியில் பங்கேற்பு:

நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்கும் குடும்பங்கள் பேறுபெற்றவர்கள். இயலாவிட்டால் ஞாயிறு திருப்பலியில் குடும்பமாக இணைந்து, முழு ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.

இறைமொழி வாசிப்பு:

நாள்தோறும் இல்லத்தில் விவிலியம் வாசிப்பது அவசியம். தனித்தனியாகவோ, அல்லது அனைவரும் இணைந்தோ வாசிக்கலாம். திருப்பாடல்கள், பவுலடியார் திருமடல்களில் ஒரு பகுதியை பிள்ளை வாசிக்க, பெற்றோர் செவிமடுப்பது குடும்ப உறவையும், ஆன்மீகத்தையும் வளர்க்கும்.

வாரமொரு முறை உண்ணா நோன்பு:

வாரத்தில் ஒருநாள் குடும்பத்தினர் அனைவரும் ஏதாவது ஓர் உணவை மறுக்கலாம், அல்லது குறைக்கலாம், அல்லது விருப்ப உணவை இழக்கலாம். உண்ணா நோன்பு உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் நலம் தருகிறது.

வாரமொருமுறை ஊடக நோன்பு:

வாரத்தில் ஒருநாள் (உண்ணாநோன்பிருக்கும் அதே நாளில்) தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி, அலைபேசி, இணையதளம் என்னும் ஐந்து ஊடகங்களுக்கும் ஓய்வுகொடுக்க வேண்டும். குறிப்பாக, தொலைக்காட்சிக்கு. இதுவும் தன்கட்டுப்பாட்டை வளர்க்கும் ஓர் ஆன்மீக உத்தி.

வாரமொருமுறை சொல் நோன்பு:

அதே நாளில் பேசும் சொற்களைக் குறைத்தோ, அல்லது தரம் குறைந்த, புண்படுத்தும் சொற்களைத் தவிர்த்தோ, அல்லது ஊக்குவிக்கும், பாராட்டும் சொற்களை அதிகரித்தோ சொல் நோன்பிருக்கலாம். குடும்பத்தில் பிணக்குகளைக் குறைத்து, உறவை அதிகரிக்கம் இன்னொரு வழி இது.

ஆண்டுத் தியானம்:

ஆண்டுக்கொருமுறை குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தியானம் ஒன்றில் கலந்துகொள்வது குடும்பத்தின் ஆன்மீகத்தை வளர்க்கும். வாழ்நாளில் ஒருமுறையாவது ஐந்து நாள் தியானம் ஒன்றில் பங்கேற்பது சாலச் சிறந்தது.

இல்லத்தில் இறையமைதி:

கத்தோலிக்க இல்லங்களில் இரைச்சல், ஓயாத திரைப்பாடல்கள், எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி அல்லது வாக்குவாதங்கள் என்பவை இருக்கக் கூடாது. உள்ளார்ந்த மற்றும் வெளியரங்க இறையமைதி இல்லத்தில் திகழ வேண்டும்.

Popular Post

Tips