நெத்திலி மீனின் மகத்துவம்

kadal vakai unavukalil omaekaa 3 paeddi aachid marrum kaloarikal kuraivaaka ullathaal vaaram irumuraiyaavathu ithanai unavil chaerththukkolvathu nallathu. athuvum, athil onraana neththili meenai chothi vaiththu chaappiddaal chuvaiyaaka irukkum. adankiyulla chaththukkal… puroddin, viddamin ee, chelineyam, omaekaa 3 paeddi aachid, minarals, viddamin ae poanra chaththukkal ullana. neththili meen chaappiduvathaal kidaikkum nanmaikal neththili meenel paali-an-chaachchuraeddad ahhpaeddi amilam athikam ullathu. … Continue reading "neththili meenen makaththuvam"
neththili meenen makaththuvam

கடல் வகை உணவுகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் வாரம் இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

அதுவும், அதில் ஒன்றான நெத்திலி மீனை சொதி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

  • அடங்கியுள்ள சத்துக்கள்…

புரோட்டின், விட்டமின் ஈ, செலினியம், ஒமேகா 3 பேட்டி ஆசிட், மினரல்ஸ், விட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன.

  • நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், பழுது பார்க்கவும் தேவையான புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், விட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து.

அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது.

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

 

Popular Post

Tips