உடலுக்கு வலுசேர்க்கும் சிவப்பு அரிசி மிளகு பொங்கல்

vellai arichiyai vida chivappu arichiyil athikalavu chaththukkal nerainthullathu. inru chivappu arichiyai vaiththu poankal cheyvathu eppadi enru paarkkalaam. thaevaiyaana poarudkal : chivappu arichi – oru kap, paachipparuppu – kaal kap, milaku, cheerakam – thalaa oru deespoon, munthiri – chirithalavu, ijchi – chiriya thundu, pa.milakaay – 2, karivaeppilai – chirithalavu, enney, ney – thalaa oru daepilspoon, uppu … Continue reading "udalukku valuchaerkkum chivappu arichi milaku poankal"
udalukku valuchaerkkum chivappu arichi milaku poankal

வெள்ளை அரிசியை விட சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி – ஒரு கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
முந்திரி – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
ப.மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.

குக்கரில் சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவிடவும்.

வாணலியில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி தாளித்து, அரிசி – பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறினால், சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

சூப்பரான சத்தான சிவப்பு அரிசி மிளகு பொங்கல் ரெடி.

குறிப்பு :

முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி சிவப்பு அரிசியை சேர்த்து கொள்வது நல்லது.

 

Popular Post

Tips