பெண்கள் தினமும் காஃபி குடித்தால் அதிசயம் நிகழும்?

maarpaka purrunooy vilippunarvu maathaththil maddum maarpakankalaip parri kavalaip paduvathu poathaathu. namathu maarpakankalukku athikamaana kavanam thaevaip padukirathu. anaiththup penkalin maarpakankalum orae maathiriyaaka iruppathillai, vevvaeru vadivankalil, vevvaeru alavukalil avai irukkinrana. athae chamayaththil maarpakaththil aerpadum thideer maarrankalum poathuvaanavai alla. unkal maarpakaththil kurippidda chila maarrankal aerpaddaal athu nechchayam kavanekkappada vaendiya onru enpathai maranthuvidaatheerkal. uthaaranaththirku; mulaikkaampaich churri kaddikal: kaampu pakuthiyai … Continue reading "penkal thinamum kaaahhpi kudiththaal athichayam nekalum?"
penkal thinamum kaaahhpi kudiththaal athichayam nekalum?

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில் மட்டும் மார்பகங்களைப் பற்றி கவலைப் படுவது போதாது. நமது மார்பகங்களுக்கு அதிகமான கவனம் தேவைப் படுகிறது.

அனைத்துப் பெண்களின் மார்பகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அளவுகளில் அவை இருக்கின்றன. அதே சமயத்தில் மார்பகத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் பொதுவானவை அல்ல. உங்கள் மார்பகத்தில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் ஏற்பட்டால் அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள். உதாரணத்திற்கு;

முலைக்காம்பைச் சுற்றி கட்டிகள்:

காம்பு பகுதியை சுற்றியிருக்கும் இடத்தில் வீக்கமோ, சிறிய பருக்களோ தென்பட்டால் அதற்கு உங்களது பால் குழாய்களில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். அதுவே கட்டியின் அளவு பெரியதாக இருந்தால் நீர்க்கட்டியோ அல்லது சதை வளர்ச்சியோ இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உடனே சென்று மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது ஆகும்.

 

மார்பகங்களில் ஏற்படும் வலி:

மார்பகங்களில் வலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன, இரண்டு மார்பகங்களும் வலிக்கிறது என்றால் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதாகவோ அல்லது அதிகமான கஃபைன் காரணமாகவோ இருக்கலாம். அதைத் தவிர உடற்பயிற்சி செய்ததால், சரியாகப் பொருந்தாத உள்ளாடை அணிந்ததால், தசை சோர்வு, காயம் போன்றவை ஏற்பட்டால், இரும்புச் சத்து குறைபாடு அல்லது மாதவிலக்கு கால தாமதமானாலும் மார்பகங்களில் வலி ஏற்படும். ஆனால் இந்தக் காரணங்கள் தான் உங்களது மார்பக வலிக்குக் காரணம் என்று உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

மார்பகங்களின் அளவு குறைதல்:

உங்களது உடல் எடை குறைந்தால் மார்பகங்களின் அளவு குறையும். பாலிசிஸ்ட் கருப்பை நோய்க்குறி இருந்தாலும் மார்பகங்களின் அளவில் மாற்றம் தென்படும், எனவே இதற்கும் மருத்துவ பரிசோதனை அவசியமான ஒன்று. சமீபத்திய ஒரு ஆய்வில் தினமும் மூன்று கப் காஃபி குடிப்பவர்களின் மார்பகங்களின் அளவு சிறியதாவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 

தலைகீழான முலைக்காம்புகள்:

உங்களது முலைக்காம்புகள் திடீரென உட்பக்கமாக திரும்பினால், அது மார்பக புற்று நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இது மிகவும் ஆபத்தான ஒரு அறிகுறி என்பதை மறந்துவிடாதீர்கள், உடனே சென்று மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அதிகமான பிரச்னையில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.

திரவம் வெளியேறுதல்:

இரண்டு முலைக்காம்புகளில் இருந்தும் திரவம் வெளியேறினால் அது ஹார்மோன் அளவில் ஏற்பட்ட இறக்கமாக இருக்கலாம்; தைராய்டு அல்லது பால் குழாய்களில் ஏற்பட்ட சுருக்கமாகவும் இருக்கலாம். மார்பகத்திலிருந்து  ரத்தக்களரியுடன் திரவம் வெளியேறுவது மார்பக புற்றுநோய்க்கான குறி என்பதால் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.

 

Popular Post

Tips