இல்லத்தரசிகளை கவர்ந்த நவீன சமையல் அறைகள்

chamaiyal araikal illaththarachikalin thaevaikalai nevarththi cheyyum ankamaaka amaivathu chavaalaana vishayamaakavae irukkirathu. chamaiyal araikal illaththarachikalin thaevaikalai nevarththi cheyyum ankamaaka amaivathu chavaalaana vishayamaakavae irukkirathu. kaddumaanaththil eththakaiyai puthumaikal pukunthirunthaalum kurukiya parappalavukkul amaiyum chamaiyal araiyai nevarththi cheyyum vithaththil amainthuviduvathillai. chamaiyal araiyai naveenappaduththuvatharku cheyyavaendiya vishayankalai paarkkalaam. * chamaiyal araiyil inaikkappaddulla minchaaram marrum thanneer kulaay inaippukalai paluthu paarththuviddu naveena karuvikalukku aerra … Continue reading "illaththarachikalai kavarntha naveena chamaiyal araikal"
illaththarachikalai kavarntha naveena chamaiyal araikal

சமையல் அறைகள் இல்லத்தரசிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அங்கமாக அமைவது சவாலான விஷயமாகவே இருக்கிறது.

சமையல் அறைகள் இல்லத்தரசிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அங்கமாக அமைவது சவாலான விஷயமாகவே இருக்கிறது. கட்டுமானத்தில் எத்தகையை புதுமைகள் புகுந்திருந்தாலும் குறுகிய பரப்பளவுக்குள் அமையும் சமையல் அறையை நிவர்த்தி செய்யும் விதத்தில் அமைந்துவிடுவதில்லை.

சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

* சமையல் அறையில் இணைக்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்புகளை பழுது பார்த்துவிட்டு நவீன கருவிகளுக்கு ஏற்ற வகையில் அவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும்.

* சமையல் அறையின் சுவர் பகுதிகளில் படிந்திருக்கும் எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளை நீக்கும் வகையில், பெயிண்டுகளை சுரண்டி சுத்தம் செய்யவேண்டும்.

* சமையல் அறையில் வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்றும் வென்டிலேசன் பேன்களை கட்டாயமாக பொருத்த வேண்டும். இவை சமையல் அறையில் பரவி இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி, அறையில் மிதமான வெப்ப நிலையை தக்கவைக்க வழிவகை புரியும். மேலும் சமைக்கும்போது வெளிப்படும் நெடிகளையும் வெளியேற்றி விடும். இல்லையெனில் நெடிகள் சமையல் அறையையும், அதன் அருகில் உள்ள அறைகளிலும் சூழ்ந்து கொண்டி ருக்கும். இது வீட்டில் இருப்பவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக அமையும்.

* இரவு மற்றும் பகல் நேரங்களில் சமைப்பதற்கு வசதியாக விளக்குகளை பொருத்த வேண்டும். சமையல் அறைகளில் பளிச்சென்று எரியும் விளக்குகளை விட, கலைநயத்துடன் எரியும் மஞ்சள் நிற விளக்குகளை பொருத்துவது மிகவும் பிரமாண்டமான சூழலை உருவாக்கும். விளக்குகளை அனைத்து இடங்களிலும் ஒளிரவிடும்படி செய்யாமல், குறிப்பிட்ட இடங்க ளில் மட்டும் ஒளிரவிட வேண்டும். அப்படி செய்தால் அறையும் நவீன மாற்றத்தை வெளிக்காட்டும்.

* சமையல் அறையின் கபோர்டு மற்றும் ரேக்குகளின் வெளிப்புற கதவுகளை அப்படியே விட்டுவிடாமல், அதில் ஏதேனும் டிசைன்களை வரைவது சமையல் அறைக்கு அலங்கார காரணியாக அமையும்.

* அறையின் அழகியலை வெளிப்படுத்துபவை வண்ணங்கள், சமையலறைக்கு பயன்படுத்தும் வண்ணங்கள் சற்று அடர் நிறமாக இருப்பது அறையின் மதிப்பை உயர்த்தும்.

* சமையல் மேடையில் அடுப்புகளை வெளிப்புறமாக வைக்காமல் மேடையின் நடுவே சிறு பள்ளமாக அமைத்து அதனுள் பதியும் படி வைப்பது. மேடைக்கான அழகினை அதிகரிக்கும். இதனால் மேடையின் மீது பாத்திரங்கள் இருப்பது போன்று தெரியும்.

* சமையல் அறையில் இடம் பெறும் பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்களை தினசரி பயன்படுத்தி விட்டு அதனை துடை த்து சுத்தமாக பராமரித்து வரவேண்டும்.

* விருந்தினர்களாக வருபவர்கள் சமையல் அறைக்குள் நுழைந்தால், பொருட்களை எப்படி வைத்திருக்கிறோம் என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதனால் பொருட்களை பயன்படுத்திய பின் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமாக சமைத்த பின்பு உடனே பாத்திரங்களை சுத்தம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் பாத்திரங்கள் சமையல் மேடையில் குவிந்து கிடக்காது. அதனாலும் அறையின் அழகு மேம்படும்.

* பிரிட்ஜை கவனமாக பராமரித்துவர வேண்டும். அதில் இருந்து துர்நாற்றம் வீசாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் பிரிட்ஜினுள் இருக்கும் பொருட்கள் ஒன்றில் துர்நாற்றம் வீசினாலும், அது பிரிட்ஜ் முழுவதும் பரவிவிடும். எனவே அழுகும் நிலையில் காணப்படும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.

 

Popular Post

Tips