என் கணவர் சொக்கத்தங்கம் – ஐஸ்

kujaris padaththil aisvaryaaraay kavarchchiyaaka nadiththullathaal, apishakpachchan ithanai virumpavillayaam.     ithanaal kanavan-manaivi idaiyae karuththu vaerupaadu aerpaddullathaakavum cheythikal vanthana.     itharku pathil aliththu aisvaryaaraay aliththa paeddi varumaaru:-   enakku kanavaraaka vaayththa apishakpachchan chokkaththankam. poana piraviyil cheytha punneyaththaalthaan avar enakku kanavaraaka kidaiththullaar.     thirumanaththukku piraku neraiya padankalil nadiththu viddaen. ellaa padankalilumae nalla kaerakdarkal kidaiththana. intha … Continue reading "en kanavar chokkaththankam – ais"
en kanavar chokkaththankam – ais
குஜாரிஸ் படத்தில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சியாக நடித்துள்ளதால், அபிஷேக்பச்சன் இதனை விரும்பவில்லயாம்.

 

  இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

 

  இதற்கு பதில் அளித்து ஐஸ்வர்யாராய் அளித்த பேட்டி வருமாறு:-

  எனக்கு கணவராக வாய்த்த அபிஷேக்பச்சன் சொக்கத்தங்கம். போன பிறவியில் செய்த புண்ணியத்தால்தான் அவர் எனக்கு கணவராக கிடைத்துள்ளார்.

 

  திருமணத்துக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன். எல்லா படங்களிலுமே நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. இந்த அளவுக்கு நான் வளர காரணம் என் கணவர் அபிஷேக்பச்சன்தான். அவர் சுதந்திரம் கொடுத்ததால்தான் இதையெல்லாம் சந்திக்க முடிந்தது.

 

  சினிமாவில் நடிப்பதற்கு அவர் தடை போட்டு இருந்தால் வீட்டில் முடங்கி இருப்பேன். சினிமாவில் கதாநாயகிகள் சந்திக்கும் பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை எனக்குள்ள எல்லையை தெரிந்து வைத்துள்ளேன்.

 

  அதை ஒருபோதும் மீற மாட்டேன். என் கணவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என்று செய்திகள் வந்தன. ´குஜாரிஸ்´ படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நான் நெருக்கமாகவும், கவர்ச்சியாகவும் நடித்து இருப்பதாக வதந்தி பரப்பினர்.

 

  அதனால்தான் அபிஷேக்பச்சன் என்மேல் கோபமாக இருப்பதாக பேசினர். எங்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் புரளி கிளப்பினர். அதை எல்லாம் பார்த்து வருத்தப்பட்டேன். இதுபோன்ற செய்திகளால் நடிகைகளின் குடும்ப வாழ்க்கை சிலநேரம் கேள்விக்குறியாகிவிடும்.

 

  என் மாமனார் அமிதாப்பச்சன், மாமியார் ஜெயா, கணவர் அபிஷேக்பச்சன் மூவரும் சினிமாவில் இருப்பதால் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். அபிஷேக் குடும்பம் சினிமா உலகில் பிரபலமானது. அந்த குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரும்படி நடந்துகொள்ள மாட்டேன்.

Popular Post

Tips