கரும் புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் நீங்க வேண்டுமா?

venneeril aavi pidippathaal, karumpullikal marrum vellai pullikalum viraivil neenkividum. atharku 5 muthal 10 nemidam aavi pidiththu, pin thaeyththaal, mookkil kaanappadum vellaiyaanavai cheekkiram vanthuvidum. maelum avai elithil varuvathodu, karumpullikal vaerodu vanthuvidum. mukaththil ulla alukkukal neenkum : mukaththil ulla alukkukal viraivil elithaaka chelvatharku,… intha murai mikavum chiranthathu. ithanaal eppoathu aavi pidikkinromo, appoathu aavi pidiththu mudiththathum, mukaththai chuththamaana … Continue reading "karum pullikal, vellai pullikal neenka vaendumaa?"
karum pullikal, vellai pullikal neenka vaendumaa?

வெந்நீரில் ஆவி பிடிப்பதால், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும்.

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும் :

முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

முகப்பரு குறையும் :

ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள பருக்கள் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

 

முகப்பரு இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

முதுமை தோற்றம் மறையும் :

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

முகம் பொலிவு பெரும் :

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் கிடைக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன உங்கள் முகத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

 

Popular Post

Tips