”தானா சேர்ந்த கூட்டத்துக்கு” தாயாராகும் சூர்யா?

viknaesh chivan iyakkaththil chooryaa nadiththu varum `thaanaa chaerntha kooddam’ padaththin padappidippu mudinthuvidda nelaiyil, padaththin aduththakadda panekal viruviruppaaka nadaiperru varukirathu. sdoodiyo kireens chaarpil kae.i.janavael raaja marrum chooryaavin 2di endardaeyinmend inainthu thayaariththu varum padam `thaanaa chaerntha kooddam’. viknaesh chivan iyakkaththil chooryaa – keerththi churaesh nadippil aak‌shan kalantha thrillar padamaaka uruvaaki varum ippadaththin padappidippu mudinthuvidda nelaiyil, padaththin dappin … Continue reading "”thaanaa chaerntha kooddaththukku” thaayaaraakum chooryaa?"
”thaanaa chaerntha kooddaththukku” thaayaaraakum chooryaa?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா படத்தின் முதல் பாதிக்கான டப்பிங்க வசனங்களை முடித்து விட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பரில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

அதற்கு முன்னதாக நவம்பரில் டீசரும், டிசம்பில் டிரைலரும் வெளியாக இருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

 

Popular Post

Tips