உங்களது குழந்தை அறிவா பிறக்கனும்மா?  கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டியது ?  

oru kulanthaiyai karuvil chumappathu enpathu penkalukku maddumae kidaiththa oru ariya varamaakum. oru kulanthaiyai entha oru kuraiyum illaamal perru eduppathu thaan ovvooru pennen kurikkoalaaka irukkum. penkalukku karppa kaalaththil chila udalnala pirachchanaikal undaakum, vaanthi, kumaddal, kaalaiyil kaaychchal poanra pirachchanaikal undaakum. iththanaiyaiyum chamaaliththu oru kulanthaiyai perreduppathu enpathu mika unnathamaana vishayamaakum. karuvil irukkum kulanthaiyai aarokkiyamaakavum, arivaakavum uruvaakka vaendiyathu ovvooru … Continue reading "unkalathu kulanthai arivaa pirakkanummaa?  karppakaalaththil cheyya vaendiyathu ?  "
unkalathu kulanthai arivaa pirakkanummaa?  karppakaalaththil cheyya vaendiyathu ?  

ஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அரிய வரமாகும்.

ஒரு குழந்தையை எந்த ஒரு குறையும் இல்லாமல் பெற்று எடுப்பது தான் ஒவ்வொரு பெண்ணின் குறிக்கோளாக இருக்கும்.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சில உடல்நல பிரச்சனைகள் உண்டாகும், வாந்தி, குமட்டல், காலையில் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இத்தனையையும் சமாளித்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது மிக உன்னதமான விஷயமாகும்.

கருவில் இருக்கும் குழந்தையை ஆரோக்கியமாகவும், அறிவாகவும் உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு நடக்க வேண்டிய பெற்றோர்களின் கடமையாகும்.

உங்களுக்கு குழந்தைக்கு எப்படி கருவில் இருந்தே அறிவை ஊட்டி வளர்க்க முடியும் என்பதில் சந்தேகம் இருக்கலாம்.

குழந்தை பிறந்த பிறகு தாலாட்டுப்பாடல் பாடி தூங்க வைப்பது உண்டு.

ஆனால் நீங்கள் மனதை வருடும் மெல்லிய இசையை உங்களது குழந்தையை கேட்க செய்யலாம். அதிக சப்தம் இல்லாமலும், அதிர வைக்கும் பாடல்களை ஒலிக்க செய்யாமலும் இருப்பது என்பது மிகவும் நல்லதாகும்.

படித்தல் தினமும் சிறிதளவு நேரத்தையாவது ஒரு நல்ல புத்தகத்தை படிக்க எடுத்துக் கொள்ளுங்கள். தாய் ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலமாக தனது குழந்தைக்கும் அறிவை ஊட்ட முடியும். பாடுதல் கர்ப்பகாலத்தில் பாட்டு பாடுவது என்பது உங்களது மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும். அதோடு மட்டுமில்லாமல் இது உங்களது குழந்தையும் மூளையையும் கூட அறிவுப்பூர்வமானதாக மாற்றும்.

பேசுதல் கர்ப்ப காலத்தில் நமது காதுகளில் விழும் வார்த்தைகளும், நமது மனதில் தோன்றும் எண்ணங்களும், அடுத்தவர்களிடம் பேசும் வார்த்தைகளும் நல்லதாக மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பிணி பெண்கள் உங்களது வயிற்றினை மசாஜ் செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கர்ப்ப காலத்தில் இது போன்று மசாஜ் செய்து விடுவதால் குழந்தைகளின் தொடு உணர்வு அதிகரிக்கும். மகிழ்ச்சியாக இருப்பது கருவில் குழந்தை இருக்கும் போது, பெண்கள் எப்போது சிரித்துக் கொண்டே சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

வேண்டாத விஷயங்களை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பது கண்டிப்பாக கூடாது.

இது குழந்தையை பாதிக்கும். வெளியில் செல்லுதல் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி வெளியில் இயற்கை நிறைந்த இடங்களுக்கு சென்று வருவது வேண்டும்.

கடற்கரை, பசுமையான இடங்கள், அழகான உணவகங்கள் என வெளியில் சென்று வருவதால் குழந்தை கருவில் இருக்கும் இரண்டாம் பருவ காலத்தில் பல சூழ்நிலை மாற்றங்களை உணர முடியும். அதுமட்டுமின்றி தாயின் மனதும் வெளியில் சென்று வருவதால் ரிலாக்ஸ் ஆகிறது.

ஆரோக்கியமான உணவு குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பசியுடன் இருப்பது மிகவும் தவறான ஒன்று. நீங்கள் தேவையான சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும் உங்களது குழந்தையை சிறப்பாக பெற்றெடுக்க முடியும். நிறைய பழங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள் என வகைவகையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

ஆல்கஹால் ஆல்கஹால் அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தால், தயவு செய்து இந்த பழக்கத்தை கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டாம். இது உங்களை மட்டுமில்லாமல் கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். புகைப்பிடித்தல் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களும் இதனை தவிர்த்தல் நல்லது. புகைப்பிடிப்பதை விட சிகரெட் புகையை சுவாசிப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் அருகில் செல்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது

Popular Post

Tips