பூமியை போலவே உயிரினங்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா தெரிவிப்பு

vaashendan: poomiyai poalavae manetharkal vaalakkoodiya 10 kirakankalai naachaa kandarinthullathu. intha kirakankalil poomiyai poalavae thadpaveppa nelaiyum, poomiyin alavai kondullathaaka therivikkappaddullathu. maelum 219 kirakankalai uyirinankal vaalaththakka paddiyalil naachaa vijjanekal chaerththullanar. naachaavin keplar vaanveli tholainookki moolam nadaiperru vantha aaraaychchikal moolam puthiya kandupidippukal velivanthullana. 2009-m aandil keplar aayvinaith thuvanki pirapajchaththil poomi maddum thaneththullathaa illai athu poanra kirakankal ullanavaa enra … Continue reading "poomiyai poalavae uyirinankal vaalakkoodiya 10 kirakankal kandupidippu: naachaa therivippu"
poomiyai poalavae uyirinankal vaalakkoodiya 10 kirakankal kandupidippu: naachaa therivippu

வாஷிங்டன்: பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா கண்டறிந்துள்ளது. இந்த கிரகங்களில் பூமியை போலவே தட்பவெப்ப நிலையும், பூமியின் அளவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 219 கிரகங்களை உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் நாசா விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர். நாசாவின் கெப்ளர் வான்வெளி தொலைநோக்கி மூலம் நடைபெற்று வந்த ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன. 2009-ம் ஆண்டில் கெப்ளர் ஆய்வினைத் துவங்கி பிரபஞ்சத்தில் பூமி மட்டும் தனித்துள்ளதா இல்லை அது போன்ற கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி துவங்கப்பட்டது.

விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளனர். இதில் பூமி போன்றே உருவத்திலும், தட்பவெப்ப நிலையில் சுமார் 50 கிரகங்களை வரை இருப்பதாக தெரிகிறது. அதில் 10 கிரகங்கள் பூமியை போலவே சூரியனை சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை போல தட்பவெட்ப நிலையும், தண்ணீருக்கான சாத்தியக்கூறுகளும் இந்த கிரகங்களில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், மற்ற தொலைநோக்கி மூலம் மேற்கொண்ட ஆரய்ச்சியில் நமது சூரிய குடும்பத்தினையும் கடந்து அமைந்துள்ள விண்மீன் கூட்டங்களில் சுமார் 3,500 கிரகங்கள் பூமியைப் போல இருப்பதற்கு வாய்ப்புள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

Popular Post

Tips