‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான: பிரபல பாகிஸ்தான் பாடகர்

nakul nadippil uruvaakiyirukkum ‘chey’ padaththin moolam pirapala paakisthaan paadakar thamilil arimukamaaki irukkiraar. nakul nadippil uruvaakiyirukkum ‘chey’ padaththil idamperum ‘iraivaa…’ enra chooahhpi paadalai paadiyiruppathan moolam thamilil arimukamaakiyullaar paakisthaan paadakaraana aathiahhp ali. aerkenavae pala paakisthaane paadalkalaiyum, henthi paadalkalaiyum aathiahhp ali paadiyirukkum aathiahhp ali, raay lakshmi nadippil viraivil velivaravirukkum ‘juli 2’ padaththirku ichaiyamaiththullaar enpathu kurippidaththakkathu. paakisthaan paadakar oruvar … Continue reading " ‘chey’ padaththin moolam thamilil arimukamaana: pirapala paakisthaan paadakar"
 ‘chey’ padaththin moolam thamilil arimukamaana: pirapala paakisthaan paadakar

நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தின் மூலம் பிரபல பாகிஸ்தான் பாடகர் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.

நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி.

ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிஃப் அலி பாடியிருக்கும் ஆதிஃப் அலி, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை. இவருடன் ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா….’ பாடலை பாடியுள்ளார். கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். மேலும் ‘செய்’ ஆல்பத்தில் பிரபல முன்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னிதயாள் மற்றும் அறிமுக பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியிருக்கும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8-ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

Popular Post

Tips