சுவையான நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி?

idli, thochaikku thoddukkolla neththili meen kulampu choopparaaka irukkum. inru intha meen kulampai cheyvathu eppadi enru paarkkalaam. thaevaiyaana poarulkal : neththili meen – 1/4 kiloa thakkaali – 1 pachchai milakaay – 1 milakaay thool – 1 maejaikkarandi mallith thool – 3 maejaikkarandi cheerakath thool – 1 thaekkarandi ijchi poondu paesd – 1 maejaikkarandi majchal thool – … Continue reading "chuvaiyaana neththili meen kulampu cheyvathu eppadi?"
chuvaiyaana neththili meen kulampu cheyvathu eppadi?

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நெத்திலி மீன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

நெத்திலி மீன் – 1/4 கிலோ
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
மல்லித் தூள் – 3 மேஜைக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 1 கப்
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்ட
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – சிறிது .

செய்முறை :

நெத்திலி மீனை நன்றாக கழுவி அதன் மேல் 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்து ஒரு கப் அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

பிறகு கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

மசாலா வாடை போனதும் தேங்காய் பாலை ஊற்றவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் மீன் துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய் பாலும் அதிக நேரம் கொதிக்க கூடாது.

மீன் வெந்ததும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி.

 

Popular Post

Tips