தினேஷ் – நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ‘உள்குத்து’

kaarththik raaju iyakkaththil thinaesh – nanthithaa irandaavathu muraiyaaka inainthu nadikkum ‘ulkuththu’ padaththin rilees kuriththa arivippu veliyaaki irukkirathu. kaarththik raaju iyakkaththil thinaesh – nanthithaa nadippil uruvaakiyulla padam ‘ulkuththu’. aerkanavae thinaesha vaiththu ‘thirudan poalees’ padaththai iyakkiyiruntha nelaiyil, irandaavathu muraiyaaka avarai iyakkukiraar. athaepoal ‘addakaththi’ padaththirku piraku thinaesham – nanthithaavum irandaavathu muraiyaaka inaikinranar enpathu kurippidaththakkathu. ‘pi.kae.pilim paekdari’ chaarpil ji.viddal … Continue reading "thinaesh – nanthithaa irandaavathu muraiyaaka inainthirukkum ‘ulkuththu’"
thinaesh – nanthithaa irandaavathu muraiyaaka inainthirukkum ‘ulkuththu’

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் – நந்திதா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் ‘உள்குத்து’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் – நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’.

ஏற்கனவே தினேஷை வைத்து ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக அவரை இயக்குகிறார். அதேபோல் ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் இரண்டாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பி.கே.பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஜி.விட்டல் குமார் பேசுகையில்,

”தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட வெற்றிபெற்ற தரமான படங்கள் இதற்கு சான்று. இந்த நிலையில் ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம்.

இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார். நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘உள்குத்து’ படத்தை ரசித்து மகிழ்ந்து ஆதரவளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் .

 

 

Popular Post

Tips