பாம்பை எரித்த நபருக்கு நேர்ந்தது என்ன?

kilinochchi – kiraajchi pakuthiyil vedivipaththil chikkiya napar oruvar uyirilanthullaar. naerriravu 11 maneyalavil paampoanrai adiththu eriththukkondiruntha poathu, ichchampavam idamperrullathu. vedivipaththil padukaayamadainthavar, kilinochchi vaiththiyachaalaiyil anumathikkappadda pinnar chikichchai palanenri uyirilanthullaar. champavam idamperra pakuthiyil nelakkanne vedikal innum kaanappaduvathaaka chanthaekikkappadukinrathu. intha nelaiyil, paampai eriththapoathu aerpadda veppaththaal nelakkannevedi vediththirukkalaamena chanthaekikkappadukirathu. champavam thodarpaana maelathika vichaaranaikalai mulankaavil poalisar munneduththu varukinranar.
paampai eriththa naparukku naernthathu enna?

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் வெடிவிபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 11 மணியளவில் பாம்பொன்றை அடித்து எரித்துக்கொண்டிருந்த போது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் இன்னும் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பாம்பை எரித்தபோது ஏற்பட்ட வெப்பத்தால் நிலக்கண்ணிவெடி வெடித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Popular Post

Tips