மும்பையில் பேரழிவு ஏற்படும் அபாயம்

mumpaiyil kadalukku adiyil rikdar alavu koalil 5 pullikalukku mael pookampam aerpaddaalum pala pakuthikal paeralivu apaayam iruppathaaka nepunarkal kooriyullanar. jappaanel naerru munthinam payankara pookampam aerpaddathu. pookampaththilum chunaami thaakkuthalilum aeraalamaanoor paliyaaki ullanar.     intha pookampaththai thodarnthu, inthiya puviyiyal aaraaychchith thuraiyai chaerntha athikaarikal, pookampaththaal mumpai ethir nookkiyulla aapaththu kuriththu aayvu cheythanar. mumpaiyil 5 pullikalukkum mael pukampam aerpaddaal … Continue reading "mumpaiyil paeralivu aerpadum apaayam"
mumpaiyil paeralivu aerpadum apaayam
மும்பையில் கடலுக்கு அடியில் ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளிகளுக்கு மேல் பூகம்பம் ஏற்பட்டாலும் பல பகுதிகள் பேரழிவு அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்திலும் சுனாமி தாக்குதலிலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.

 

  இந்த பூகம்பத்தை தொடர்ந்து, இந்திய புவியியல் ஆராய்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரிகள், பூகம்பத்தால் மும்பை எதிர் நோக்கியுள்ள ஆபத்து குறித்து ஆய்வு செய்தனர். மும்பையில் 5 புள்ளிகளுக்கும் மேல் புகம்பம் ஏற்பட்டால் நகரின் பெரும் பாலான பகுதிகளில் பலத்த சேதம் ஏற்படும் என தெரிவித்தனர்.

 

 

மும்பை பல தீவுகளால் சூழ்ந்த நகரம். கடற்கரை அருகே உள்ள பல பகுதிகளை சீரமைத்துதான் நகரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பூகம்பம் ஏற்பட்டால் இப்படி சீரமைக்கப்பட்ட பகுதிகள்தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

 

  பூகம்ப அச்சுறுத்தல் அளவின் அடிப்படையில் உலகில் உள்ள பகுதிகளை ஐந்து மண்டலங்களாக பிரித்துள்ளனர். மண்டலம் 5 அதிக பூகம்ப அச்சுறுத்தில் உள்ள பகுதியாகும். மும்பை நகரம் 3வது மண்டலத்தில் வருகிறது. இது ஓரளவுக்கு பாதுகாப்பான மண்டலம்தான். மும்பையை சுற்றியுள்ள கடல் படுகையில் பெரிய அளவிலான குறைபாடுகள் எதுவும் இல்லை என்பதால் சுனாமி பாதிப்பும் அதிகம் இருக்காது என அதிகாரிகள் கூறினர்.

 

 

Popular Post

Tips