செல்போனுக்கு ரீசார்ஜ் போட வந்த பெண்ணுக்கு இப்படியோர் அநீதியா?

thannudaiya kadaikku chelpoan reechaarj poada vantha pennai karpaliththa naparukku 8 varuda kadunkaaval thandanai alikkappaddullathu. inkilaanthu naaddin maanchesdar pakuthiyil vachiththu vanthavar chuvaapnel kulaath(30). inthiya vamchaavaliyai chaerntha ivar maraaddiya maanelam naakpoorai poorveekamaaka kondavar. ivar maanchesdar vithindan pakuthiyil ulla kadaiyil panepurinthu vanthaar. annelaiyil, kadantha maarch maatham 19m thaethi iravu, 40 vayathu mathikkaththakka oru pen, antha kadaikku vanthu ‘thanathu … Continue reading "chelpoanukku reechaarj poada vantha pennukku ippadiyoar aneethiyaa?"
chelpoanukku reechaarj poada vantha pennukku ippadiyoar aneethiyaa?

தன்னுடைய கடைக்கு செல்போன் ரீசார்ஜ் போட வந்த பெண்ணை கற்பழித்த நபருக்கு 8 வருட கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வந்தவர் சுவாப்னில் குலாத்(30). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் மராட்டிய மாநிலம் நாக்பூரை பூர்வீகமாக கொண்டவர். இவர் மான்செஸ்டர் விதிங்டன் பகுதியில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தார்.

அந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி இரவு, 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், அந்த கடைக்கு வந்து ‘தனது செல்போனில் சார்ஜ் இல்லை எனவே, சார்ஜ் போட அனுமதி தரமுடியுமா?’ என கேட்டுள்ளார்.

அவரை உள்ளே அழைத்த குலாத், கடையின் ஷெட்டரை மூடிவிட்டு, திடீரென அந்த பெண் மீது பாய்ந்துள்ளார். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை தாக்கிவிட்டு கற்பழித்துள்ளார்.

மேலும், இதை வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதோடு, இரவு முழுவதும் அந்த கடையிலேயே அவரை சிறை வைத்துவிட்டு காலையில் விடுவித்துள்ளார்.

இதுபற்றி அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். குலாத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், தனது குற்றத்தை குலாத் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவருக்கு 7 வருடம் 8 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.

அவரின் சிறைத்தண்டனை முடிந்ததும், அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.

Popular Post

Tips